அதிகரிக்கப்படும் எரிவாயுவின் விலைகள்!! அதிர்ச்சியில் நுகர்வோர்….
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் பெறுமதி சேர் (VAT) வரியின் காரணமாக எரிவாயு விலைகளில் பாரியளவு மாற்றமானது ஏற்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந் நிலையில் வட் வரியானது சுமார் 18% அதிகரிக்கப்பட உள்ளதினால் அதற்கு ஏற்றவாறு எரிவாயுவின் விலைகளும் தற்போது இருப்பதிலிருந்து மிகவும் அதிகமாக கொள்வனவு செய்வதற்குரிய சந்தர்ப்பங்கள் ஜனவரி மாதத்தில் இருந்து பொது மக்களுக்கு ஏற்படக்கூடும் என நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகரான தனுஜா பெரேர அவர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றார்.
மற்றும் இவ்வாறு அதிகரிக்கப்படுகின்ற வட் வரி இனால் எரிவாயுக்கான விலையானது 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அதே போல் 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்பட போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந் நிலையில் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏற்பட போக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையினால் நாளாந்தம் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் எனவும் பல கருத்துக்கள் பரவலாக பேசப்பப்பட்டு வருகின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் வட் வரியின் அதிகரிப்பானது பாமர மக்களை மேலும் பின்னடைய செய்வதற்குரிய முக்கிய ஒன்றாக எதிர்காலத்தில் அமையக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.