இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!! அச்சத்தில் பிரதேச வாசிகள்….தொடரும் விரிவான செய்திகள்…
இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது இந்திய மாநிலங்களில் ஒன்றான அசாமில் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் உள்ளூர் ஊடகங்கள் தற்சமயம் தகவலினை வெளியிட்டு இருக்கின்றது.
மற்றும் குறித்த நிலநடுக்கமானது இன்றைய தினம் அசாம் மாநிலத்தில் தேஸ்பூர் எனும் இடத்தில் இன்று அதிகாலை 5. 55 மணிக்கு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் இதற்கு முன்பாக இந்த வருடத்தின் நவம்பர் மாதம் எட்டாம் திகதி அன்று குறித்த அசாம் மாநிலத்தில் 4.1 ஒன்று ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்கனவே உணரப்பட்டிருந்த அமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் நேற்றைய தினமும் நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவலினை வெளியிட்டு உள்ளது.
மற்றும் இன்றைய தினம் உணரப்பட்ட நிலநடுக்கமானது 3. 4 ரிக்டர் எனவும் குறித்த மையம் தெரிவித்து இருக்கின்றது.
இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இருப்பினும் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற பொதுமக்கள் பலரும் மற்றும் அருகாமையில் வசிக்கின்ற கிராமவாசிகள் இதுகுறித்து சற்று எச்சரிக்கையாக இருக்க கூறி இந்திய மாநில அரசாங்கமானது எச்சரிக்கை தகவலினை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் ஆனது எதிர்வரும் காலங்களில் உணரப்படலாம் எனவும் தேசிய நில அதிர்வு மையமானது பொதுமக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் குறிப்ட்டுள்ளது.
இதே போல் இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அசாமின் இன்னும் ஒரு பிரதேசத்தில் 3. 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மிகச் சிறிய அளவுகளில் உணரப்பட்ட குறித்து நிலநடுக்கமானது நாளடைவில் அதிக அளவில் உணரப்படுமாயின் யாரும் எதிர்பார்க்காத பாரிய சேதங்களை ஏற்படுத்தி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.