Srilanka NewsWorld

சர்வதேச ரீதியில் பேசப்படும் நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல்…

அண்மையில் கடந்த 24ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியான டி. சரவணராஜா அவர்களின் பதவி விலகலானது தற்போது பல்வேறுப்பட்ட சர்வதேச ரீதியில் இணையதளங்களும் மற்றும்

சர்வதேச செய்தி ஊடகங்களும் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றது.

இலங்கையில் இருந்து நீதிபதியான நீதித்துறையில் கடமை புரிந்த நீதிபதியான டி . சரவணராஜா அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டு,

இலங்கை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறியமை குறித்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கேள்விகளை எழுப்புவதாக Jurist இணையதளம் தனது செய்திகளில் வெளியிட்டு உள்ளது.

Jurist இணையதளமானது சட்ட மற்றும் நீதி தொடர்பான சர்வதேச இணையதளம் ஆகும்.

இலங்கை நீதிபதியின் பதவி விலகல் தொடர்பான பாரதூரமான கேள்விகளை எழுப்பி சர்வதேச ரீதியில் மக்களின் கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்த இணையதளத்தின் செய்தி.

மேலும் நீதிபதி அவர்களின் பதவி விலகல் கடிதமானது கடந்த வியாழக்கிழமை அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அது வேகமாக பரவி வந்ததாகவும் Jurist தனது செய்தியில் தற்போது சுட்டிக்காட்டி உள்ளது.

மற்றும் தனது நீதிபதி வாழ்க்கை மீது அதிக அழுத்தங்கள் காரணமாகவே தான் பதவியை ராஜினாமா செய்வதாக குறித்த கடிதத்தில் நீதிபதி சரவணராஜா குறிப்பிட்டுள்ளதாக Jurist இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தனக்கு குறுந்தூர் மலை வழக்கு விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவை மாற்றுமாறு;

கடந்த ஆகஸ்ட் கடந்த மாதம் 21-ம் தேதி அன்று இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தம்மை அலுவலகத்திற்கு வரவழைத்து பாரிய அழுத்தம் கொடுத்ததாக,

முல்லைதீவு மாவட்டத்தின் நீதிபதியான டி சரவணராஜா அவர்கள் குற்றம் சாட்டி உள்ளதாகவும் குறித்த இணையதளம் செய்தியை வெளியிட்டுள்ளது.

Jurist இணையதளமானது குறித்த செய்தி தொடர்பாக மேலும் குறிப்பிட்டதாவது; தனது பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மற்றும்,

இலங்கையின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு அச்சுறுத்தலினை கொடுத்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக இணையதளம் தனது செய்திகளில் சூட்டி காட்டியுள்ளது.

மேலும் நீதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பினை குறைத்ததாகவும் மேலும் புலனாய்வு பிரிவினர் தன்னை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக தன்னை அச்சுறுத்திய குறித்த அதிகாரிகள் செயல்பட்டதாகவும் நீதிபதி அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றார் .

இதனாலே தான் பதவி வகித்து வந்த மாவட்ட நீதிபதியான பதவியினை உடனடியாக ராஜினாமா செய்து ,

அதனை அடுத்து உடனடியாக இலங்கை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்களை அடுத்தடுத்து தனது இணையதளம் வாயிலாக செய்தி Jurist இணையதளம் வெளியிட்டுள்ளது.

போராட்டங்கள் …

இதனை அடுத்து நீதிபதியின் அச்சறுத்தல் குறித்தும் மற்றும் குறித்த நீதிபதி அவர்கள் சம்மந்தப்பட்ட குறுந்தூர் மலை விவகாரம் குறித்தும் நீதி கோரி இலங்கையின் பல்வேறு பட்ட பிரதேசங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனை அடுத்து எதிர்வரும் நான்காம் திகதி அதிகாலை 9 மணி முதல் 10 மணி வரை யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாகவும்.

மேலும் இதனை தமிழ் தேசிய கூட்டணி இன் பேச்சாளரும் மற்றும் முன்னாள் நாடாளு உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தற்போது மக்களுக்கு தகவலினை விடுத்து மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அரைகூவல் ஒன்றினையும் விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button