யாழ் மற்றும் கொழும்பு இடையேயான புகையிரத சேவை இடைநிறுத்தம்… வெளியான தகவல்…
தற்போது யாழ் மற்றும் கொழும்பு இடையேயான புகையிரத சேவையாக இயங்கிக் கொண்டிருக்கின்ற புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து சேவையின் திணைக்களமானது தற்போது அறிவித்து இருக்கின்றது.
இடைநிறுத்தம்….
குறித்த திணைக்களமானது புகையிரத சேவை இடைநிறுத்தம் பற்றி மேலும் குறிப்பிடுகையில்;
புகையிரத மார்க்கத்தினை நவீனமாக்கும் திட்டத்திற்காகவே குறித்த தொடரூந்து சேவையானது தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது சுமார் ஆறு மாத காலங்கள் இடைநிறுத்த உத்தேசித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு நவீனமாக்கும் திட்டத்தில் இரண்டாம் கட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதி ஆரம்பிக்கப்படும் எனும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு நோக்கி இயங்கி வரும் தொடரூந்து ஆறு மாத காலப்பகுதி வரை கொழும்பிலிருந்து மஹவ வரையும் மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன் துறை வரையும் மட்டுமே சேவையானது நடைமுறையில் இருக்கும் என்பதனையும் குறித்த திணைக்களமானது தற்போது அறிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.