நாசா நடத்திய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கை சிறுவன்…. பாராட்டும் மக்கள்…
விண்வெளி ஆய்வு நிறுவனமான அமெரிக்காவின் நாசா இனால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையினைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் முதலாம் பரிசினை வென்று சாதனை படைத்துள்ளார்.
மற்றும் குறித்த சிறுவனானவர் தரம் இரண்டு சிறுவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சிறுவன் அனுராதபுரம் மாவட்டத்தில் திரப்பின என்னும் பகுதியினை சேர்ந்த தஹாம் லோஷித பிரேமரட்ன எனும் ஏழு வயது சிறுவனே இவ்வாறு நாசாவின் சித்திர போட்டியில் பங்கேற்று சாதனை படைத்து இருக்கின்றார்.
மற்றும் குறித்து ஓவியமானது முதலிடம் பெற்றுக் கொண்டதுடன் அடுத்த ஆண்டிற்கான நாசா இன் நாட்காட்டிலும் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறித்த சிறுவன் ஆனவர் விண்வெளியில் வாழ்தல் மற்றும் பணி செய்தல் என்ற தலைப்பின் கீழே ஓவியம் ஒன்றினை வரைந்து அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் அச் சிறுவன் வரைந்த ஓவியம் ஆனது 2024 ஆம் ஆண்டுக்கான நாசாவின் நாட்காட்டியில் ஜூலை மாத புகைப்படம் ஆக இடம்பெற்றுள்ளது.
நாசாவினால் நடத்தப்பட்ட குறித்த ஓவியப் போட்டியிலே கலந்துகொண்டு வெற்றியை தனதாக்கி கொண்ட இலங்கைச் சிறுவனின் வெற்றியினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இச் சிறுவனின் வெற்றி இலங்கை நாட்டிற்கு பெருமையை தேடித்தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.