வெள்ள அபாய நிலை!! குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை….
இலங்கை நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை தொடர்பாக வெள்ள அபாய நிலையானது ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களமானது தெரிவித்து இருக்கின்றது.
குறித்து சீரற்ற காலநிலையின் காரணமாக மல்வத்து ஓயாவின் நீர்மட்டமானது அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும்,
எனவே அதன் வழியாக உள்ள தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களமானது வெள்ள அபாய எச்சரிக்கையினை தற்போது விடுத்திருக்கின்றது.
வெங்கலச்செட்டிக்குளம், மடு, முஸ்ஸாலை மற்றும் நானாட்டான் பிரதேச செயலகங்களில் காணப்படுகின்ற தாழ்மான பகுதிகளில் கணிசமான மழை வீழ்ச்சியானது பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இவ்வாறு மல்வத்து ஓயாவின் சமவெளியில் காணப்படுகின்ற வீதிகள் மற்றும் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்வதற்குரிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் குறித்த திணைக்களமானது தெரிவித்திருக்கின்றது.
எனவே அப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் குறித்த பிரதேசத்தின் ஊடாக பயணம் மேற்கொள்கின்ற வாகன சாரதிகளும் அதிக கவனம் செலுத்துமாறும் குறித்த திணைக்களமானது தற்போது அறிவித்திருக்கின்றது.
இலங்கை நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற கால நிலையின் காரணமாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இது தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒரு சில பகுதிகளில் அதுவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற தொடர்ச்சியான மழையின் காரணமாக வெள்ளத்தில் அநேக பிரதேசங்கள் அகப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் வெள்ள நிவாரண பணிகளை அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.