நியூயோர்க்கில் இன்று இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!!
இன்றைய தினம் அமெரிக்காவில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத் தொடரானது நியூயோர்க்கில் நடந்து வருகின்றது.
இந் நிலையில் இன்றைய தினம் இலங்கையின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று இரவு அமர்விலே தனது உரையினை நிகழ்த்த உள்ளார்.
இதனை எதிர்க்கும் முகமாகவே இந்த போராட்டமானது நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இன்று இரவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கதினால் நடத்தப்பட உள்ளது .
இப் போராட்டம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆனது தற்போது அமெரிக்கா வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது .
மேலும் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களின் இனப்படுகொலைக்கு தற்போது ஜனாதிபதியாக இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களும் காரணம் என்பதனை வலியுறுத்தியே அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் அணி திரண்டு போராட்டத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் எனக் கூறிய ரனில் அவர்களே இனப்படுகொலை காரணமான அனைத்து முக்கிய நபர்களையும் பாதுகாத்து வருகின்றார் என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளது.
மேலும் தற்போது இலங்கையில் வடக்கு கிழக்குகளில் ஏற்படுகின்ற பௌத்தமயமாக்களும் மற்றும் புதிய சிங்கள குடியேற்றமும் அதிவேகமாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள் .
இதனை அடுத்து தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து விரட்டுமாறும் மற்றும் தமிழர்களை அடித்து கொள்ளுமாறும் உத்தரவினை பிறப்பித்த ரணிலே இன்று அமெரிக்காவில் உரையாற்ற இருக்கிறார் .
இதனை தம்மால் வேடிக்கை பார்க்க முடியாது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது .
மேலும் தமிழ் மக்களின் உரிமைகளை இல்லாது ஒழித்த ரணிலுக்கு எதிராக ஐ. நா முன்றலில் அணி திரள்வோம் என்ற விடயங்களை குறிப்பிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தற்போது போராட்டத்திற்கு அழைப்பினை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.