Srilanka News

இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்கள்….

இலங்கையில் வடக்கு மாகாண மாவட்டங்களில் ஒன்றான வவுனியா மாவட்டத்தில் வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்கள் ஆக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இல் பம்பை மடுவில் அமைந்து உள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வலயமட்ட விளையாட்டு போட்டியில் பரிதாபமாக இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்து உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இரு மாணவர்களும்வவுனியாவின் முஸ்லிம் மகாவித்தியாலயத்தி இனை சேர்ந்த மாணவர்கள் என்பதும் தெரியவந்து உள்ளது.

இவ் இரு சிறுவர்களும் சுமார் 14 வயதும் மற்றொருவர் பதினைந்து வயது உடையவர் என்பதும் அறியவந்து உள்ளது.

வவுனியாவின் பல்கலைக்கழகத்தில் முறையற்ற விதத்தில் காணப்பட்ட நீர் குழி ஒன்றிலே இச் சிறுவர்கள் இருவரும் தவறுதலாக விழப்பட்டு உயிரிழந்து உள்ளதாக மேலும் தகவல் தெரிய வந்து உள்ளது .

இச் சிறுவர்கள் இருவரும் தவறுதலாக குழியினுள் விழுவதை அவதானித்த மற்றுமொரு சிறுவன் ஆசிரியர்களுக்கு அறிவித்து.

அதனை தொடர்ந்து வவுனியா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் அப் பகுதி மக்களினால் உம் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் வலய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டவர்களினால் உம் சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள்.

எனினும் இச் சிறுவர்கள் இருவரும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இவ் விரு சிறுவர்களின் மரணத்திற்கு பல்கலைக்கழக வளாகமே பொறுப்பு கூற வேண்டும் என உம் சிறுவர்களின் வீட்டார்கள் தங்களது மன கஷ்டங்களை தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் முறையற்ற கண்காணிப்பின் ஊடாகவே இவ் வலய விளையாட்டு போட்டி ஆனது நடைபெற்று உள்ளது என்பதை இத் துயரச் சம்பவம் மூலம் அறிய கூடியதாக இருக்கின்றது.

இதனால் அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது குறிப்பிட்ட இறந்த இரு மாணவர்களின் உறவினர்கள் தாக்குதலை நடத்தி வந்தனர்.

இதனை அடுத்து அப் பகுதியில் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் இறந்த இரு சிறுவர்களின் உறவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்,

குறித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பாக பல்கலைக்கழகத்தினை விட்டு அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் தெரிய வருகின்றது.

இந் நிலையில் அவ்விரு சிறுவர்களின் ஜனாஸாக்களின் நல்லடக்கமானது இன்று பிற்பகல் 1:00 மணி அளவில் அவர்களது இல்லத்தில் இடம்பெற்று உள்ளது.

மேலும் அவ் விரு சிறுவர்களின் ஜனாஸாக்கள் ஜனாஸாக்களின் நல்லடக்கத்திற் காக பாராளுமன்ற உறுப்பினர் ஆன ரிசார்ட் அவர் களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

மேலும் வட மாகாண அமைச்சரான சார்ஸ் அவர்கள் இது குறித்து தனது இரங்கல்களை தெரிவித்ததாகவும்,

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தகுந்த முறையில் ஆராயப் பட்டு உரியவர்களுக்கு தகுந்த தண்டனை அளிப்பது ஆக அவர் தனது இரங்களில் தெரிவித்து உள்ளார்.

மேலும் பல்கலைக் கழக வளாகத்தின் முறை அற்ற கண்காணிப் இனாலும் வலய மட்ட விளையாட்டு போட்டிகளின் அதிகாரிகளின் அசம்மந்தப் போக்கி இனாலும் பரிதாபமாக இரு சிறுவர்களை இழந்து உள்ளது ஆகவும் தெரிய வருகின்றது.

Related Articles

Back to top button