மாலைத்தீவிற்கு அருகில் பதிவான நிலநடுக்கம்!! இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுமா??? விரிவான செய்திகள்….
மாலைத்தீவிற்கு அருகாமையில் இன்றைய தினம் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. மற்றும் இந் நிலநடுக்கம் ஆனது இன்றைய தினம் சரியாக காலை 8 மணி அளவில் நிலநடுக்கமானது பதிவாகி இருப்பதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா என்பவர் தெரிவித்து இருகின்றார்.
மற்றும் இலங்கைக்கு அருகாமையில் உள்ள இந்திய பெருங்கடலிலே இவ் நிலநடுக்கம் பதிவாகி இருப்பது இலங்கைக்கு ஆபத்தா என சந்தேகம் ஏற்ப்பட்ட நிலையில் இது குறித்து இலங்கைக்கு எவ்வித பாதிப்புகளும், ஆபத்துகளும் இல்லை எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
மற்றும் மாலைத்தீவிற்கு அருகில் உணரப்பட்ட குறித்த நிலநடுக்கமானது சுமார் 5 ரிக்டர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்திய பெருங்கடலில் மாலை தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள மலைத்தொடர்களிலே இந்நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் இலங்கைக்கு வடக்கே வடகிழக்கு இந்திய பெருங்கடலில் 4.8 ரிட்டர் அளவிலான நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அவர்கள் உறுதி செய்து இருக்கின்றார்.
இது பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் ஆழமாக ஏற்பட்டுள்ளது .
குறித்த நிலநடுக்கம் காரணமாக பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் இவ்வாறு இலங்கைக்கு அருகாமையில் பல நிலநடுக்கங்கள் நாளுக்கு நாள் பதிவாகி வருகின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.