இலங்கையர்களை நாடு கடத்திய குவைத் அரசு!!
ஒரே நாளில் 54 இலங்கையர்களை நாடு கடத்திய குவைத்த அரசு மிரள வைக்கும் சம்பவம்.
இல்லங்கையர்கள் வெளிநாட்டில் குவைத் ,சவுதி ஆகிய நாடுகளில் பணிப் பெண்களாகவோ அல்லது வேறு தொழில்களை புரிவதற்காகவோ அநேகர் வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக செல்வது வழக்கம்.
ஆனால் உண்மையில் இவர்கள் தங்கள் உடைய வேலை தளங்களில் விசா முடிவு அடைந்த பின்னர் அங்கு இருந்து தப்பி வேறு இடங்களில் ஒழிந்து வேறு வேலை களை செய்து வருவது வழக்க ம் ஆகக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இது மிகவும் ஒரு ஆபத்தான செயல் ஆகும். ஏனென்றால் இவ்வாறு இவர்கள் விசா முடிவடைந்த பின் அந் நாட்டில் வசித்தால் அந் நாடு அவர்களை சட்ட விரோதமாக குடியேறிய நபர்கள் என்று முத்திரை குத்தி விடும் .
எவ்வாறாயினும் விசா காலம் முடிவடைந்த பின்னர் திரும்பவும் சொந்த நாடு திரும்பி மீண்டும் அதற்குரிய முறைகளை சரியான சட்ட ரீதியான முறையில் செய்து மீண்டும் அங்கு சென்று வேலை செய்வதே பாதுகாப்பாக அமையும் .
இவ்வாறு இருக்க பல வருடங்களாக பலரும் இச் ட்ட விரோத செயலை செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உரிய எவ் வித உத்தரவாதமும் இல்லை என்பது உம் குறிப்பிடத் தக்கது .
இலங்கையர்களை நாட்டில் இருந்து அனுப்பியதன் காரணம்…
இந் நிலையில் இன்றைய தினம் குவைத் அரசு ஆனது சட்ட விரோதம் ஆக நாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் சுமார் 54 இலங்கையர்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL230 விமானம் மூலம் இலங்கைக்கு ஒரே நாளில் அனுப்பி உள்ளார்கள்.
இதில் சுமார் 53 பெண்களும் ஓர் ஆணும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சட்ட விரோதமாக நாட்டில் வசித்து வந்ததன் காரணமாகவே இவர்கள் வெளியேற்றப் பட்டு இருக்கின்றனர்.
பல்வேறு பட்ட இன்னல்களுக்கு மத்தியில் தங்களின் குடும்பத்தின் வறுமைக்காக வெளிநாடு சென்று உழைக்கும் பல இலங்கையர்களை இப்போது காணக் கூடியதாக இருக்கின்றது.
இவர்கள் வறுமையின் நிமித்தம் தங்களின் குடும்பத்தின் சுமைகளை சுமந்த வண்ணம் பல கனவுகள் அடங்கியதாக வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்கள்.
ஆனால் இவர்கள் முறை அற்ற இவ்வாறான சட்ட ரீதியற்ற செயல்களைப் புரிந்து ஆபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் நாம் அறிந்ததே .
மற்றும் பல்வேறுபட்ட மோசடி செய்யும் ஏஜென்ட் களிடம் சிக்கி இப்போது வரை சொந்த நாடு நாட்டிற்கு திரும்புவது குறித்து கேள்விக்குறியாக பலரும் இருந்து வருகின்றனர்.
அவ் வகையில் பலரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். பெண்களை பாலியல் ரீதியான செயலில் ஈடுபடுத்தும் கும்பல்களும் மற்றும் மோசடி செய்யும் கும்பல்களும் இருந்து வருகின்றனர்.
பல பெண்கள் இதில் சிக்கி பல நாட்கள் சித்திரவதை அனுபவித்து அதில் சிலர் மட்டுமே தப்பித்து உள்ளதும்,
மற்றும் பல பெண்களின் விபரங்கள் இன்றுவரை அறியாது தற்போது வரை அவர்களை தேடிய வண்ணம் இருக்கும் குடும்பத்தார்களும் இலங்கையில் தற்போது வரை இருந்து வருகின்றனர்.
இதற்கு எல்லாம் வேலை வாய்ப்பு பணியகமே அக்குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இலங்கையிலிருந்து வறுமை நிமித்தம் செல்லுபவர்களுக்கு இவ்வாறான செயல்கள் மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே அமைகின்றது .
எனவே நமது பாதுகாப்பை நாமே உறுதி செய்து கொள்ள வேண்டும். நம்பகத் தன்மையான ஏஜென்ஸ்களின் மூலம் வேலைக்காக வெளிநாடு செல்லுங்கள் ,
மற்றும் உங்களின் விசாகாலம் முடிந்த பின்னர் அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்க நினைக்கும் எண்ணத்தை இன்றே மாற்றி விசா முடிந்ததும் பாதுகாப்பாக உங்கள் நாடு திரும்புங்கள்.
ஏனென்றால் உங்களுக்கு என உங்களை எதிர்பார்த்து இருக்கும் அன்பான குடும்பம் ஒன்று உங்கள் சொந்த நாட்டில் இருந்து வருகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.