மீண்டும் அதிகரிக்கப் படும் மின் கட்டணம் அவதியுறும் மக்கள்…
இலங்கையின் மின்சார சபையினால் கணிக்கப்பட்டுள்ள சுமார் 32 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஈடு கட்டுவதற்காகவே மின் கட்டணமானது மீண்டும் அதிகரிக்கப் படுகின்றது.
22 % கட்டண அதிகரிப்பு தேவைப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு சுமார் 18% மின் கட்டண அதிகரிப்பே போதுமானதாக இருக்கக்கூடும் என தற்போது இலங்கை மின்சார சபை தெரிவித்து இருக்கின்றது.
இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டிருந்தன, மற்றும் அடுத்த திருத்தம் தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில்,
இந்த மாதமே மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்கப் பட வேண்டும் என அதற்குரிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் பொதுப் பயன்பாடுகள் ஆணை குழுவிற்கு மின்சார சபையானது தகவலினை வழங்கியுள்ளது.
மற்றும் அந்த வகையில் குறித்த மின் கட்டண 22 சதவீதம் அதிகரிப்பானது சுமார் ஒரு யூனிட் இற்கு எட்டு ரூபாய் அதிகரிக்க அனுமதித்துள்ளனர் .
இவ்வாறு மீண்டும் மீண்டுமாக குறைந்த கூடுகின்ற மின்சார கட்டணமானது மக்கள் மத்தியில் பாரியளவு தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.