சிறுவர்களுக்கு எச்சரித்த இலங்கை அரசு…. பெற்றோர்களின் விசேட கவனத்திற்கு…
தற்போது இலங்கை அரசானது சிறுவர்களுக்கு எச்சரிப்பு தகவலினை வழங்கி வருகின்றது.
நோய் எதிர்ப்பு மருந்துகள் பாக்டீரியாவை வலுவிழக்க செய்யும் எனவே அதனை கூடுதலாக சிறுவர்களுக்கு வழங்குவது குறித்து பெற்றோரினை மிக எச்சரிக்கையாக இருக்குமாறு தற்போது குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
ஆன்டிபயாட்டிக் விழிப்புணர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மற்றும் மருத்துவ ஆலோசனை இன்றி சிறார்களுக்கு வழங்கப்படுகின்ற நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் உயிர் வாழ்வதற்கு தேவையான பக்ரீயாக்களை அழித்து விடும் என அவர் தெரிவித்து இருக்கின்றார்.
அதிக நோய் எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொள்ளும் மனிதனானவன் 50 ஆண்டுக்குள் மரணிக்கும் சாத்தியம் கொண்டவன் என அவர் தெரிவித்து இருக்கின்றார்.
நோய் எதிர்ப்பு மருந்துக்கள் பாக்டீரியாக்களை வலுவிழக்க செய்து மரணத்துக்கு வழிவகுக்கும் எனவே இது தொடர்பில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் உடலினுள் காணப்படுகின்ற மிகவும் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியா வகைகள் இதன் மூலம் இவ் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் மூலம் கொல்லப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அடிக்கடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் சாதாரணமாக ஒருவரின் வயது மற்றும் எடை என பல்வேறு காரணிகளை வைத்தே நோய் எதிர்ப்பு மாத்திரைகளின் அளவு நிர்ணயிக்க படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் சாதாரணமான வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்காக நோய் எதிர்ப்பு மருந்துக்கு அத்தியாவசியமற்றது என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இருமல் சளி மற்றும் சிறு காயங்களுக்கு வைத்தியரின் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இதனை அடுத்து இலங்கையில் காணப்படுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்த மழையின் காரணமாகவும் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு விதமான நோய்கள் தாவி வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் இன்றைய தினங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், சுவாசக்குழாய் நோய்கள் என்பன அதிகம் பரவி வருகின்றது மற்றும் சிறுவர்கள் உட்கொள்கின்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகள் தொடர்பாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும்,
தேவையற்ற சந்தர்ப்பங்களில் அதிகம் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சிறுவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டு இருக்கின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.