இலங்கையில் அதிகரித்து வரும் தீவிர நோய்… மாற்றுவழி இல்லையா?? வெளியான ஆய்வறிக்கை !!
தற்போது இலங்கையில் அதிகரித்து வரும் சக்கரை வியாதியினால் சுமார் 23 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் இனால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மற்றும் உலக நாடுகளில் சக்கரை வியாதி மூலம் ஆபத்தில் இருக்கின்ற 10 நாடுகளின் தரப்படுத்துகையில் இலங்கையும் உள்ளதாக குறித்த ஆய்வு தெரிவிக்கின்றது.
மற்றும் சர்க்கரை நோயானது இலங்கையில் பலரது வாழ்வினை பாதித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை பேராசிரியர் அவர்கள் தற்போது தெரிவித்திருக்கின்றார்.
அதீத சர்க்கரை நோயினால் பல்வேறுபட்ட உடல் உபாதைகள் வருவதும் மற்றும் இது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்களை கொண்டு வரக்கூடிய அடித்தளமாக அமைந்திருப்பதும் தெரிய வருகிறது.
எனவே இலங்கையில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து சற்று எச்சரிக்கையாகவும்இந்த நோய் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.