Srilanka News

பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் சிக்கிய சந்தேக நபர்!!! இலங்கையில் நடைபெறும் போதை பொருள் மாபியா…

இலங்கையில் நடைபெறுகின்ற போதைப்பொருள் விற்பனை கும்பலானது அனேகமாக பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதை குறி வைத்தே விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு எதிர் கால சந்ததியை போதை பொருளுக்கு அடிமையாக்கி இலங்கையை நாசமாக்கின்ற பல்வேறு விதமான கும்பல்கள் இலங்கையில் இயங்கி வருகின்றது.

தற்போது பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு

களுத்துறை மாவட்டத்தில் வடக்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 27 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக தற்போது போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும்,

மேலும் அப் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களினால் விடுக்கப்பட்ட இரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீசாரின் சுற்றி வளைப்பில்பின் போது பாடசாலை வளாகத்தின் அருகாமையில்சந்தேக நபரான போதை பொருள் விற்பனையாளர் 6 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போலீசார் அவரது வீட்டில் இருந்து மறைத்து வைத்திருந்த சுமார் 1080 போதை மாத்திரைகளை கண்டுபிடித்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தற்போது தகவலினை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த போதை பொருள் விற்பனையாளர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களையும் மற்றும் இது தொடர்பாக போதை பொருள் கும்பல்களையும் தேடி வருகின்றனர்.

போதை பொருட்கள் – இலங்கையில்..

இலங்கையில் நடைபெறுகின்ற போதை பொருட்கள் விற்பனையில் அதிகமாக பாடசாலை மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது உண்மையில் கவலைக்குரிய விடயமாகவே பல்வேறு தரப்பினாலும் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் எதிர்கால சந்ததிக்கு இவ்வாறு போதைப் பொருளினை விற்பனை செய்வதினால் எதிர்கால சமூகமே சீர் கெட்ட சமூகமாகவும் மற்றும்

பல்வேறு ரீதியான உடல், உளப் பிரச்சனைகளுக்கு உள்ளாக கூடும் என பல்வேறு விதமான பிரச்சனைக்கு உள்ளாக கூடும் எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர் .

அவ் வகையில் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் போதை பொருளானது நடமாடி வருவதாகவும் அதே சமயம் பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கூடிய பாடசாலை வளாகத்தில் இவ்வாறான சம்பவம் சம்பவங்கள் நடந்து கொண்டு இருப்பதால் இது குறித்து பாடசாலை சமூகம்.

பெற்றோர் தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றும் எதிர்கால சமூகத்தினரை எவ்வளவு தான் கட்டுக்கோப்பான சூழ்நிலையில் வளர்த்தாலும் அதனை தடம் மாற்றுவதற்கென,

பல்வேறு விதமான சூதுகளும் போதை பொருட்களும் இலங்கைகளில் தற்போது அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இது குறித்து சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு போதை பொருள் பாவனைகளினாலே பல்வேறுப்பட்ட பாரதூரமான குற்றச் செயல்கள் இலங்கை நாட்டினுள் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாட்டில் அதிகரித்த வருகின்ற பல்வேறு விதமான குற்றச்செயர்களுக்கு அடித்தளமாக அமைகின்ற போதை பொருளினை அழிப்பதற்கான கடுமையான சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்,

என பல்வேறு விதமான தொண்டு நிறுவனங்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button