SportsSrilanka News

தேசிய அணிகளை தெரிவு செய்யும் குழு நியமனம்…. இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்பு …


இலங்கையின் கிரிக்கெட் சபை ஆனது தேசிய அணிகளை தேர்வு செய்வதற்குரிய புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளதாக தற்போது அறிவித்து இருக்கின்றது.

மற்றும் இத் தேர்வுக் குழுவானது உடனடியாக பதவி ஏற்கும் வகையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ அவர்கள் மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தேசிய அணிகளை தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான உபுல் தரங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அஜந்தா மெண்டிஸ், இந்திக டி சாரம், தரங்க பரணவிதான, தில்ருவான் பெரேரா ஆகியவர்கள் குறித்த தேர்வு குழுவிற்குரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதல் முதலாக இளம் வயதில் தெரிவு செய்யும் குழுவிற்குரிய தலைவராக உபுல் தரங்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய

மற்றும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தேர்வு குழுவின் முதல் பணியாக 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஜிம்பாவை சுற்றுப்பயணத்தை மேட்கொள்வதற்கான தேசிய அணினை தேர்ந்தெடுப்பதற்குரிய பணிகளை செய்வது தான் எனவும் தற்போது தகவல்கள் வெளியாக இருக்கின்றது.

Related Articles

Back to top button