Srilanka News

திருகோணமலையில் திடீர் ஆர்ப்பாட்டம் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்!!

இலங்கையின் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி தற்போது திருகோணமலையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக இவ்வாறு ஒன்று திரண்ட இன்றைய தினம் 18 10 2023 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ் வகையில் நீண்ட காலமாக நிரந்தரமான நியமனமின்றி தற்போது தங்கள் தற்காலிகமாக கடமையாற்றி வருவதாகவும் மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்த நிலையில் தற்காலிக நியமனம் குறித்தான சம்பளம் போதாமையினால் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இருக்கின்றனர்.

மேலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில்

மற்றும் திருகோணமலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் செயலகத்தில் தற்போது கடமை புரிகின்ற உயர் அதிகாரிகளை சந்தித்து தங்களின் பிரச்சனைகள் தொடர்பான மகஜர் ஒன்றினை கையளித்து விட்டு நடைபவனியாக கண்டி பிரதான வீதியினூடாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை நோக்கி சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவீனங்களின் காரணமாக தற்காலிகமான வேலைகளில் புரிந்து வருபவர்களின் சம்பளமானது மிகவும் குறைவானதாக இருப்பதோடு அன்றாட வாழ்க்கையினை நிம்மதியாக கொண்டு செல்வதற்குரிய வசதிகளும் இல்லாது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இதற்குறிய தீர்மானமாக தற்காலிக நியமனத்திற்கான சம்பளத்தினை உயர்த்த வேண்டும் அல்லது அவர்களுக்கு என நிரந்தர நியமனம் வழங்கி சம்பளத்தின் அளவை அதிகமாக கொடுக்க வேண்டும்.

Related Articles

Back to top button