மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…. ஆபத்து நிலையில் ஐந்து மாவட்டங்கள்!!
இலங்கை நாட்டில் ஆங்காங்கே பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக சுமார் ஐந்து மாவட்ட மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையானது தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது தெரிவித்து இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அவ் வகையில் இன்றைய தினம் மதியம் 2:30 மணி அளவில் மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையானது நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இலங்கையின் மலைப் பிரதேசங்களான கண்டி , மொனராகலை , மாத்தளை ,பதுளை ,நுவெரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு தற்போது மண்சரிவு அவாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குறிப்பிட்ட மாவட்டத்தின் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அவ் வகையில் ;
மாத்தளை மாவட்டத்தின் மெதகமை, வலப்பனை ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலி அல, பண்டாரவளை, சொரணதோட்டை, பசறை ஆகிய பகுதிகளுக்கும் , கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, லக்கல , பல்லேகம பகுதிகளுக்கும் , விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
எனவே குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் ஆழமான வேர்கள்,சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்ப்படுமாறும் குறித்த நிறுவனமானது தற்போது தெரிவித்து இருக்கின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.