Srilanka News

அதிகரித்த டெங்கு நோயாளர்கள்!! உயிரிழந்த இளைஞன்….

இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண பகுதியில் தற்போது அதிகரித்த டெங்குயோ நோயாளர்களின் எண்ணிக்கையின் காரணமாக பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறையினர் எடுத்து வருகின்றனர்.

அந்த நிலையில் இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் 23 வயது உடைய இளைஞன் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மற்றும் குறித்த இளைஞன் அச்சுவேலி இனைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் என்பவர் என தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றது.

மற்றும் குறித்த இளைஞனிடம் டெங்கு காய்ச்சல் கண்டறிய பட்ட பின்னால் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் மூளை சாவடைந்துள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தற்போது தெரிவித்திருக்கின்றது.

இருந்தபோதிலும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் குறித்து இளைஞனானவார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சலின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 71 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரித்த

மற்றும் டெங்கு காய்ச்சலிற்க்கு என புதிதாக இரண்டு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

மற்றும் டெங்கு காய்ச்சலோடு வைத்தியசாலைக்கு வருகின்ற நபர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்து வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அதே வேளை கடந்த திங்கட்கிழமை அன்று 11 மாதம் ஆன குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலின் காரணமாக உயிரிழந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் கடந்த சனிக்கிழமை அன்று டெங்கு காய்ச்சலுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்;

குறித்த பல்கலைக்கழக மாணவிக்கு வழங்கப்பட்ட டெங்கு மருந்தின் விளைவாக ஒவ்வாமையின் காரணத்தினால் குறித்த மாணவி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே அதிகரித்த டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு சுற்றுப்புற சூழல்களில் டெங்கு ஒழிப்பிற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதாரத் துறையானது தற்போது எச்சரித்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button