Srilanka News

சுற்றுலா பயணிகளால் இலங்கையில் அதிகரித்த வருவாய்!! மகிழ்ச்சியில் இலங்கை மக்கள்…

பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த இலங்கை தற்போது முன்பிருந்தது போன்ற சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிகரித்துள்ளதாக தற்போது சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தகவலினை வெளியிட்டுள்ளது.

இம் மாதம் செப்டம்பர் மாதம் முடிவடைந்த 20 நாட்களில் சுமார் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக 75000 ற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகார சபை தகவலினை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒட்டுமொத்தமாக 75 222 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது .

மேலும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் படி செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 19 767 நபர்கள் இலங்கையின் அயல் நாடான இந்தியாவின் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இந்தியாவில் இருந்து இலங்கையினை சுற்றி பார்ப்பதற்கென இன்னமும் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து 5336 நபர்களும் ஜெர்மனியில் இருந்து 5999 பேர் நபர்களும் ரஷ்யாவில் இருந்து 4835 நபர்கள் சீனாவில் இருந்து 4438 பேரும் மேலும் ஆஸ்ட்ரேலியாவில் இருந்து 4464 சுற்றுலா பயணிகளும் செப்டம்பர் மாதத்தின் 20 நாட்களுக்குள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளதாக அத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த மாதம் மொத்தமாக 136405 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 979,540 சுற்றுலா பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தரவுகள் மேலும் குறிப்பிடுகின்றன.

இதனால் இலங்கை அந்நிய செலாவணியானது அதிகரித்து வருவாய் இணை கூட்டுவதற்குரிய அனைத்து சந்தர்ப்பங்களும் இருப்பதாக தெரிய வருகிறது.

இவ்வாறு இலங்கை நாட்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையினாள் இலங்கை நாட்டின் பண சிக்கல் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவும் இருக்கின்றது.

Related Articles

Back to top button