மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் நிலை… இலங்கை ஏற்பட்டுள்ள அபாயம்…
தற்போது தொலைபேசி செயலி ஒன்றின் மூலம் இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளது தொடர்பாக வெளியாகியுள்ளதான செய்தி தற்போது இலங்கையில் தீயாக பரவி வருகின்றது.
இந் நிலையில் இலங்கையில் வசிக்கின்ற லட்சக்கணக்கான மக்களின் மிகவும் பாதுகாப்பாக வைக்கக்கூடிய தரவுகளான மின்னஞ்சல் முகவரி மற்றும் வாங்கி அட்டை இலக்கங்கள் என்கின்ற மிக முக்கிய தரவுகள் டார்க் வெப்(Dark Web) மூலம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் வெப் என்றால் என்ன?
சாதாரணமாக இணைய வாசிகளினால் அணுக முடியாத இணையத்தின் ஒரு பகுதியே இது ஆகும். மேலும் குறித்த டார்க் வெப் இணையதளம் ஆனது தற்போது மிகப்பெரிய இணைய குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்ற தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இவ்வாறு பகிரப்பட்ட தனிப்பட்ட தரவுகள் தொடர்பான குறித்த நபர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக இது குறித்து தங்களது பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் இணையம் வழியாக வெளியிடப்பட்ட தரவுகள் குறித்து இதனுடன் சம்மந்தப்பட்ட நிறுவனமானது எந்த வித விளக்கமும் இது வரை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
இன்றைய நவீன உலகின் தொழில்நுட்பத்தின் அதீத முன்னேற்றம் காரணமாக காரணமாக இவ்வாறு தனிப்பட்ட ரீதியிலான தகவல்களும் திருடப்படுவது மட்டும் இன்றி பல்வேறு வகையான குற்ற செயல்களுக்கு தற்போது நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பாதுகாப்பான முறையில் இணையத்தினை கையாளுமாறும் ,தனிப்பட்ட மிகவும் முக்கிய தரவுகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் இலங்கை மக்களுக்கு தற்போது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.