முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை…. சிரமத்திற்கு உள்ள பயணிகள்….
இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி பயணத்தினை மேற்கொள்ள இருந்த விமானமானது முன்னறிவிப்பின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றைய தினம் அதிகாலை வேளையில் சென்னைக்கு செல்லவிருந்த விமானமே இவ்வாறு திடீரென முன்னறிவிப்பு எதுவும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மற்றும் சுமார் 226 பயணிகளுடன் நேற்று காலை சுமார் 7. 20 மணிக்கு புறப்பட இருந்து யூ எல் என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமே முன்னறிவிப்பின்றி பயணத்தினை இரத்து செய்துள்ளது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாத பயணிகள் பலர் அசௌகரிங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது பயணிகளிடம் மன்னிப்பை கூறியுள்ளது.
மற்றும் திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே குறித்த விமான சேவையானது உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக குறித்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் முகாமையாளர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பின்னர் குறிப்பிட்ட தாமதத்தின் பின்னர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பின்னர் வேறு ஒரு விமானத்தில் வெற்றிகரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசோகரிங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆனது பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் குறித்த தொடர்பாடல் முகாமையாளர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.