தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்த இலங்கை பாடகிக்கு நேர்ந்த கதி!!
தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்தாரா ? யார் அந்த பாடகி என்று பலரும் அவரை பற்றி சோசியல் மீடியாவில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .ஆமாம் யார் அந்த பாடகி இப்படி ஒரு சம்பவம் எங்கே நடந்தது என்று தெரியுமா ?
உமாரியா சின்ஹவன்சா
இலங்கை யிலே இச் சம்பவம் நடை பெற்றுள்ளது . உமாரியா பிந்தி ஆயிஷா சின்ஹவன்சா என்பதே இவரது முழுப் பெயர் ஆகும் . இவர் சிங்கள இனத்தை சேர்ந்த இளம் பாப் பாடகி ஆவர் .
உமாரியா சின்ஹவன்சா 5ம் திகதி ஜனவரி மாதம் 1991 ஆம் ஆண்டு இல்லங்கை இன் தலைநகர் ஆன கொழும்பில்பிறந்தார் .
இவர் இசைக் கலைஞர்களாக இருந்த டோனி சின்ஹவன்சா மற்றும் ஆயிஷா சின்ஹவன்சா ஆகியோரின் மகள் ஆவார், மேலும் உமாரியா தனது வாழ்க்கையி இன் ஆரம்பத்தில் இருந்தே இசையை வெளிப்படுத்தினார். உமரியா இலங்கையின் கொழும்பில் உள்ள முஸ்லீம் பெண்கள் கல்லூரி மற்றும் கேட்வே இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தார்.
படிப்பு
அவர் இசையில் BA ஹானர்ஸ் பட்டம் பெற்றார் மற்றும் அவர் உள்துறை வடிவமைப்பு மற்றும் வீடியோகிராஃபியில் டிப்ளமோ உம் பெற்றுள்ளார்.
உமரியாவிற்க்கு சுபாண்ட்ரியோ மற்றும் ஹார்தோனோ என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். ஹர்தோனோ ஒரு இசை தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார்.
அவரது மூத்த சகோதரி உமாரா சின்ஹவன்சாவும் ஒரு இசைக்கலைஞர்.
உமரியாவின் பாட்டி ராணி பெரேரா, இலங்கை சினிமாவில் ஒரு நடிகை. இவர் மறைந்த பாடகியும் நடிகையுமான ருக்மணி தேவியின் பாட்டியும் ஆவார்.
இலங்கை பிரபலமான உமரியா சின்ஹவன்சா, ஒரு இலங்கை பாப், ஆர்&பி மற்றும் ஜாஸ் பாடகி ஆவார். உமாரியா சின்ஹவன்சா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஏ-தரம் பெற்ற இளைய இசைக் கலைஞர் ஆவார் .
இசை பின்னணி
இவர் இலங்கையின் இசைத்துறைக்கு பெரிதும் பங்காற்றி உள்ளார் . அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ‘கலா கீர்த்தி அபிமானி’ விருதை வென்றுள்ளார்.
உமரியா தனது 11 வயதில் தனது இசை வாழ்க்கையை 2005 இல் தொடங்கினார்.
பல்வேறு நிலைகளில் தனது சகோதரியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். இவர் முதன் முதலில் ஆசை மண் பியாபன்னா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.
மேலும் அவர் பான் ஆசியா மியூசிக் இன்டர்நேஷனல் மியூசிக் போட்டி மற்றும் கிரிமியா மியூசிக் ஃபெஸ்ட் சர்வதேச போட்டியில் வெள்ளி விருதுகளை வென்றுள்ளார்என்பதும் குறிப்பிட தக்கது .
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் இல் நடந்ததது என்ன?
இவ்வளவு படித்த பட்டம் பெற்ற உமரியா எவ்வாறு தேசிய கீதம் பாடும் போது தவறு இழைத்தார் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கீதத்தை
ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ… லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா என்பதற்கு பதிலாக ஸ்ரீ… லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மக (த்)தா என்று பாடியுள்ளார் .
இது பெரிய சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது, அவர் மன்னிப்பு கோரி தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு உள்ளார் .
அப் பதிவில் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப நிகழ்வின் போது தான் பாடிய தேசிய கீதத்தில் பிழையாக பாடியமை குறித்து தான் கவனம் செலுத்தி உள்ளதாகவும் இது குறித்து யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் தன்னை மன்னித்து விடவும் என்றும் இனி இவ்வாறான தவறிழைக்க மாட்டேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை .இட்டுள்ளார் .