இலங்கையில் அதிகரித்து வருகின்ற தொலைநோயாளிகளின் எண்ணிக்கை!! சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை…
தற்போது இலங்கையில் அதிகரித்து வருகின்ற தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை குறித்து சுகாதாரத் துறையானது இலங்கை மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
இந் நிலையில் கம்பஹா மாவட்டத்திலே குறித்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமானது இது குறித்து மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கின்றது.
இலங்கையில் அதிகரித்து வருகின்ற தொழு நோயாளர்களின் அதிகரிப்பு தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மற்றும் தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 130 தொழு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மற்றும் இவர்கள் தொற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மற்றும் தொழுநோயினை ஆரம்ப கட்டத்திலே அறிந்து கொள்ள முடியுமாயின் முறையான சிகிச்சைகளை கொண்டு அதனை முழுமையாக குணப்படுத்த முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
தோல் உணர்வின்மை மற்றும் உடலில் புண்கள் ஏற்படுமாயின் உடனடியாக தோல் சம்பந்தமான மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறவேண்டும் என தொற்று நோயின் நிபுணர் தற்போது குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் உடனடியாக ஆரம்ப கட்டத்திலே தோல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால்,
தொழு நோயானது எலும்பியல் நிலைக்கு கூட மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாகவும் குறித்து நிபுணர் தெரிவித்து இருக்கின்றார்.
எனவே இத்தொழுநோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்று பூரண குணமடைவது முக்கியமான விடயங்களில் ஒன்று என அவர் தெரிவித்து இருக்கின்றார்.
மற்றும் இது அவ்வளவு பெரிய பாரதூரமான விடயம் அல்ல எனவும் முறையான ரீதியில் சிகிச்சை பெற்றால் இதனை எளிதில் குணமாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.