இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்… பதிவான இரண்டாவது மரணம்!!!
தற்போது உலக நாடுகளிலும் அதிலும் இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றானது மிக வேகமாக பரவக்கூடும் எனவும் சுகாதாரத்துறையானது தற்போது எச்சரித்து இருக்கின்றது.
இந் நிலையில் சரியாக ஒரு வாரத்திற்கு இடையில் மீண்டும் கோவிட் மரணம் ஒன்று இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி இருக்கின்றது.
மற்றும் கம்பஹா மாவட்டத்தினைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்துள்ளதாக உம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் சரியாக ஒரு வார கால பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளடைவில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றின் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்பின் அளவுகளும் அதிகரிக்கப்படும்.
எனவே கொரோனா தொற்று தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை தற்போது எச்சரித்து இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.