ஆஸ்திரேலியாவிற்கு செல்ல போலி விசா கொடுத்து பண மோசடி செய்த சந்தேக நபர் கைது !!
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பில் புலன்விசாரணை பிரிவு போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபரானவர் எதிர்வரும் 16ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச் செய்தி குறித்து புலன்விசாரணை பிரிவு போலீஸ் மேலும் கூறியதாவது ;
இவர் 28 வயதுடைய இளைஜன் எனவும் போலியான வெளிநாட்டு முகவர் எனவும் விசாரணை போது தெரியும் வந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரையே இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு எனக் கூறி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி அவரிடம் இருந்து சுமார் 90 இலட்சத்தி 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலன் விசாரணை போலீசார் தற்போது தகவலினை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை அடுத்து குறித்த ஆஸ்திரேலியாவிற்கு இலங்கையிலிருந்து பயணம் செய்ய முடியாது எனவும் மேலும் இந்தியாவிற்கு சென்று ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய வேண்டும் என்று குறித்த சந்தேக நபரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு குறித்த நபர் இந்தியாவிற்கு சென்றுள்ளார் .
அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும்போது குறித்த விசா போலியானது என தெரியவந்துள்ளது .
பின் சந்தேகம் நபரின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்ட கொண்டவர் நபர் உடனடியாக குறித்த தகவலினை போலீசாருக்கு அறிவித்ததை அடுத்து இவ் விடயம் அம்பலமாகியுள்ளது.
இதனை அடுத்து குறித்து போலி முகவரிற்கு எதிராக மட்டக்களப்பு புலன் விசாரணை போலீசார்கள் விசாரணையை ஆரம்பித்து இருக்கின்றனர்.
இதனை அடுத்து குறித்த சந்தேகம் நபரானவர் திருகோணமலையில் வைத்து குற்ற புலன் ஆய்வு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி விசா மோசடி…
இவ்வாறு இலங்கையில் போலி விசா மற்றும் போலியான வேலை வாய்ப்பு என பல்வேறு கும்பல்கள் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு விதமான மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற மோகம் மற்றும் இலங்கையின் வறுமை நிலை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி என்பனவே இவ்வாறு மர்ம கும்பல்களிடம் சிக்குவதற்கு காரணமாக அமைகின்றது.
மேலும் இவர்கள் கொடுக்கின்ற பணமானது 1 , 2 லட்சம் அல்ல கோடிக்கணக்கான பணங்களை இவ்வாறு பலர் இழந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் இவ்வாறு மோசடி கும்பல்களின் செய்தி அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
எப்படியாவது வெளிநாடு சென்று நன்கு உழைக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற போது தங்களது பணங்களை கொடுத்து கூட இவ்வாறு மோசடி சம்பவங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
இவர்கள் ஏமாறும் குறித்த தொகையான பணங்களை வைத்து ஏதாவது வியாபாரம் செய்தால் கூட அதிகளமான லாபங்களை ஈட்டிக் கொள்ள முடியும்.
இருப்பினும் வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற அதீத பிரியத்தினாலே பலர் தங்களது பணங்களை இழந்து மற்றும் வேறு ஒரு நாட்டில் அனாதையாக விடப்படுகின்ற சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.
அவ் வகையில் இது குறித்து சற்று இலங்கை மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என குற்ற புலனாய்வு போலீசார் பிரிவினர் தற்போது மக்களுக்கு அறிவித்தலினை விடுத்துள்ளதுடன்,
நம்பகத் தன்மையான ஏஜென்சி இடமோ அல்லது வேலை வாய்ப்பு பணியகத்தின் மூலமாகவோ வெளிநாடு செல்லுங்கள் எனவும் போலீசார் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.