வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!!
அண்மை காலங்களில் இலங்கையில் ஏற்படுகின்ற அதீத பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகரித்த விலைவாசியினால் பல வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்ட இலங்கை வாழ் குடிமக்கள் தற்போது வேறு நாடுகளில் தங்களது வேலைக்காக செலவதற்கு முடிவு செய்துள்ளனர் .
அவ் வகையில் குவைத் துபாய் என பல நாடுகளிலும் வேலைக்காக பதிவு செய்கின்ற மற்றும் ஏமாற்றப்படுகின்ற சம்பவகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சம்பவம் குறித்து அனேக மோசடிகள் நிகழ்வதாக தற்போது வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்திருந்தது.
வெளிநாடு வேலைக்காக – மோசடி
இதனை அடுத்து தற்போது குருணாகல் மாவட்டத்தின் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காணப்படுகின்ற நிறுவனம் ஒன்றில்,
வேலைக்கான உத்தரவு இன்றி மக்களின் பணங்களை மோசடி செய்யும் நோக்கில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது.
மேலும் குறித்த நிறுவனத்தின் மீது கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் குறித்த ஆட்சேர்ப்பாளர் தற்போது போலீசாரினாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலை தீவு, துபாய், குவைத் ஆகிய நாடுகளில் வேலை இருப்பதாக கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக கிடைக்கப்படுகின்ற முறையான வேலை அனுமதி உத்தரவு இல்லாமல் பல கும்பல் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
எனவே இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் மற்றும் முறையான வழிகளில் முன்னெடுக்கப்படுகின்ற வேலை வாய்ப்பு நிறுவனங்களின் ஊடாகவே இவ்வாறான நாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என தெரிய வருகின்றது.
மேலும் இச் சம்பவங்கள் குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேடப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தொடர்பாக அதிக கவனத்தினை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆட்சேர்ப்பாளர் சமூக வலைத்தளங்களில் போலியான விபரங்களை விநியோகித்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றார்.
குறித்த நிறுவனத்தின் அறையில் இருந்து சுமார் 272 கடவுச்சீட்டுகளும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆவணங்களும் சுயவிபரக் கோவைகளும் கிடைக்கப்பட்டுள்ளதாவும் வேலைவாய்ப்பு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கை வாழ் மக்கள் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.