இங்கிலாந்தில் புதிய கோவிட் வைரஸ் திரிபு தொடர்பாக பாதுகாப்பாக இருக்க கோரி அரசாங்கம் விடுத்துள்ள செய்தி!!!
தற்போது கோவிட்-19 தொடர்பாக புதிய வைரஸின் திரிபானது ஆங்காங்கே பதிவாகி வருகிறது அந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இவ் வைரஸ் தொடர்பாக மருத்துவமனை வட்டாரம் தகவல் ஒன்றை விடுத்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட அனேகர் கோவிட் வைரஸின் புதிய திரிபு வைரசுடன் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இதனை அடுத்து கோவிட் வைரஸ் தடுப்பூசி இன் பூஸ்டர் தடுப்புஊசி பெறாத 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிடுகையில் பூஸ்டர் தடுப்பூசியினை NHS எனும் இணையதளம் வாயிலாகவோ அல்லது NHS ஆப் வாயிலாகவோ அல்லது 119 என்கின்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ பூஸ்டர் தடுப்பூசிக்குரிய முன்பதிவினை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
B .A .286 எனப்படும் திரிவடைந்த கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்கள் முன் எச்சரிக்கயாக இருக்க வேண்டும் என இதன் போது வலியுறுத்துகின்றது.
மேலும் இங்கிலாந்தில் மருத்துவமனை அதிகமாக இருப்பினும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் குறைவான அளவு மருத்துவ கட்டமைப்புகளே காணப்படுவதனால் இது குறித்து இப்போது இருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக நிபுணர்கள் பலரும் வைரஸின் புதிய திரிபு தான் மாற்றமடைகிறது தவிர தடுப்பூசிகளானது இதிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிடுகின்றனர்.
பாரிய கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு கோவிட் வைரஸிற்குரிய சோதனைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதால் தற்போது எவ்வளவு வீதமானவர்கள் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிவது சற்று கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்போதைய திரிபடைந்த கோவிட் வைரஸ் இனால் இங்கிலாந்தில் மட்டும் சுமார் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்கொட்லாந்தில் இது தொடர்பாக ஐந்து விதமான வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இது குறித்து தொற்றுக்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
கோவிட் பூஸ்டர் தடுப்பூசி…
50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் வழங்கப்பட்டது இருபினும் குறிப்பிட்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் குறைவானவர்களுக்கே பூஸ்டர் தடுப்பூசியானது வழங்கப்பட்டுள்ளதாகவும் ,
எனவே பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் உடனடியாக மேற்கூறப்பட்ட தளங்களை அணுகி முன்பதிவு செய்துகொண்டு ,
குறித்த பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு கோவிட்-19 புதிய திரிபில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவித்தலினை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அரசாங்கம் ஆனது மேலும் தெரிவிக்கையில் இனிவரும் குளிர்காலங்களில் இப் புதிய வைரஸின் தொற்றானது அதிகரிக்கலாம் எனவும்,
மேலும் கடந்த வாரங்களிலிருந்து இக் கோவிட் 19 வைரஸின் இன் புதிய திரிபு வைரஸானது வெகு விரைவாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வாறு உலக நாடுகளை உலுக்கிய கோவிட்-19 வைரசினை தொடர்ந்து இதனது அடுத்த திரிபானது தற்போது உலக நாடுகளில் மெதுவாக ஆரம்பித்து வருகின்றது .
எனினும் இதனது மெதுவான ஆரம்பத்தில் எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி மனிதர்களின் செயல்பாடுகள் இருக்குமானால் வேகமாக உலகம் முழுவதும் பரவி கோவிட்-19 வைரஸின் மூலம் எவ்வாறு அன்புக்குரியவர்களை இழந்தது போன்ற இன்னும் ஒரு சூழ்நிலைக்கு உலக மக்கள் தள்ளப்படுவார்கள் என்றே கூற வேண்டும்.
எனவே இது தொடர்பான முன்ன நடவடிக்கைகளையும் இப்போதிலிருந்து செயல்படுத்தி கோவிட்-19 இன் புதிய திரிபில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.