மேலதிக வகுப்பு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை!! வெளியான ஆசிரியரின் மறுமுகம்… அதிர்ச்சி தரும் தகவல்…
மொனராகலை மாவட்டத்திலே மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவியை குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதன் காரணமாக தற்போது போலீசாரினால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் தொம்பகஹவெல, லியங்கொல்ல எனும் பிரதேசத்தில் வாசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது .
மேலும் அதே பிரதேசத்தில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியை குறித்த ஆசிரியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
மேலும் குறித்த ஆசிரியர் குறித்த மாணவியின் கணித பாட ஆசிரியர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
கடந்த எட்டாம் திகதி அன்று கணித பாடத்திற்கான இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டிய உள்ளதாக குறித்த மாணவியை மேலதிக வகுப்பிற்கு தனது வீட்டுக்கு வருமாறு ஆசிரியர் மாணவியின் தாயிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த மாணவியை தனியாக யாரும் இல்லா தனது சகோதரியின் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றார்,
பின்பு மாணவிக்கு சாப்பிடுவதற்கான உணவுகளை கொடுத்து அவரை மயக்கம் அடைய செய்து பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போது போலீஸ் தரப்பினார் தெரிவித்து இருக்கின்றனர். குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு தற்போது நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.
அதுவும் மாணவர்களை பாதுகாக்க வேண்டிய இவ்வாறான பாடசாலை சமூகமே மாணவர்களை அதிக வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர்.
இந்நிலையில் பாடசாலைக்கும் மற்றும் மேலதிக வகுப்பிற்கும் செல்லும் பெண் பிள்ளைகள் குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறான செயல்களுக்கான சட்டங்கள் கடுமையாகும் பட்சத்தில் இது போன்ற செயல்கள் நாளடைவில் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது .