Srilanka News

மாணவ மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்!! பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்….

தற்போது இலங்கை நாட்டில் இடம்பெறுகின்ற அதீத பொருளாதாரம் நெருக்கடியின் காரணமாக தரமற்ற பாடசாலை உபகரணங்கள் நாட்டிற்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளதும் இதனால் பாடசாலை மாணவ மாணவிகளின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாக தற்போது வைத்தியர்கள் வட்டாரம் தெரிவித்து இருக்கின்றனர்.

மற்றும் இவ்வாறு கொண்டுவரப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் தரமற்ற பாடசாலை உபகரணங்கள் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இவ்வாறு பாடசாலை மாணவர்களினால் கற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களில் காணப்படுகின்ற மையானது தரமற்றதாக காணப்படுவதாகவும்,

குறித்த தரமற்ற தலையானது மாணவர்களின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியது என தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

மற்றும் இவ்வாறு பாடசாலை சிறார்கள் பென்சில் மற்றும் வண்ண பென்சில்களை வாய் வழியை உட்கொள்வதன் வாயிலாக ஈயம் மற்றும் கன உலோகங்கள் உடலுக்குள் உட்புகும் நிலை அதிகமாக இருப்பதாகவும் இதனால் எதிர்காலத்தில் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் எனவும் வைத்தியர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு குழந்தைகள் பயன்படுத்தப்படும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களுக்கும் மட்டும் இன்றி இதேபோல் பாடசாலை மாணவ மாணவிகள் பயன்படுத்துகின்ற தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவு பெட்டிகள் போன்றவற்றை பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் காரணமாகவும் மாணவர்கள் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் வைத்தியர்கள் தற்போது தெரிவித்திருக்கின்றனர்.

இதன் போது வைத்தியர்கள் கொள்வனவு செய்கின்ற உபகரணங்களின் அடிப்பகுதியில் BPA 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால் அவை பயன்படுத்த ஏற்றவை என குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

எனவே இலங்கை நாட்டின் எதிர்கால சந்ததியாக வர இருக்கின்ற பாடசாலை மாணவர்களின் உடல் நலம் குறித்து சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு தற்போது வைத்தியர்கள் அறிவுறுத்தல்களை குறிப்பிட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button