சுவிஸ்ஸிலிருந்து அகதிகள் மூவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்!! வெளியான அதிர்ச்சி தகவல்……
மூன்று இலங்கையர்கள் அகதிகள் என சுவிஸ் இல் தஞ்சம் புகுந்த இவ் மூன்று நபர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூன்று நபர்களும் தற்போது சுவிஸ்ஸிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு திருத்தி அனுப்பப்பட்டுள்ளனர்.
இச் சம்பவமானது கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றதாகும். மற்றும் சுவிட்சலாந்தின் சூரி எனும் விமானத்தின் மூலம் அவ் மூன்று அகதி தஞ்சம் கோரியவர்களின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நேரத்தின் படி மூவரும் சுமார் காலை 10 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்களில் ஒருவர் சுமார் 2015 ஆம் ஆண்டளவில் இருந்து அகதி தஞ்சம் கோரப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவரும் சுவிஸ்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் சமீப காலங்களில் இவ்வாறு அகதி தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையானது நாளடைவில் அதிகரித்து வருவதும் அதனை அரசாங்கமானது குறிப்பிட்ட அகதி தஞ்ச கோரிக்கைகளை அதிகமாக நிராகரித்து வருவதாகவும் மனித உரிமை ஆர்வாலர் அவர்கள் தற்போது சுட்டிக்காட்டி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.