ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய கத்தோலிக்க திருச்சபை.. குறிப்பிட்ட முக்கிய விடயம்!! மீண்டும் திசை மாறும் விசாரணை….
ஈஸ்டர் தின தாக்குதல் ஆனது நடைபெற்று சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து உண்மையான தகவல்கள் ஏதும் பகிரங்கமாக சட்டரீதியாக அறிவிக்கப்படாமையினால் இது குறித்து பல்வேறு ரீதியான விசாரணைகள் எழும்பி இருந்தன.
இதனை அடுத்து சேனல்4 வெளியிட்ட ஆவணப்படுத்தலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்போது குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீள ஆய்வு செய்வதற்கு கட்டளையிட்டு இருந்தார்.
இதனை அடுத்து தற்போது இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையானது இலங்கை ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தற்போது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்திலே குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னைய தினங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பினும்,
அதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை நன்கு விசாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்து தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட தேசிய கத்தோலிக்க குழுவின் உறுப்பினர்களான ;
மல்கம் ரஞ்சித் அவர்கள் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட கடிதத்தினை தற்போது ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
முக்கியமாக இக் கடிதத்தில் புறக்கணிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்ட நபர் குறித்து தீர விசாரிக்காமை,
மற்றும் அமெரிக்கா உளவுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்பிட்ட நபர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அக் கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குண்டுதாரியின் ஜாமீனுக்கும் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இருந்த தொடர்பு மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட லோறி இனை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் என்பன குறித்து உரிய முறையில் நன்கு விசாரணை நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிட்டிருந்தது.
மேலும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை சரியான ரீதியில் கொண்டு செல்வதற்கு பல்வேறு ரீதியான இடைஞ்சல்கள் மற்றும் விசாரணைகளை தடுத்ததாகவும் முக்கியமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
மற்றும் சேனல் 4 இனால் வெளியிடப்பட்டிருந்த தகவல்கள் குறித்தும் ஆராய வேண்டும் எனவும் மற்றும் குறித்த விசாரணையானது பகிரங்கமாக அனைவரது வெளிநாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.