குறித்த நபர் 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்
Brecon Becons தேசிய பூங்கா என்று அழைக்கப்படும் Bannau Brycheiniog நீர்வீழ்ச்சியில் குழந்தைகளை மீட்க முயன்ற ஒருவர் உயிரிழந்தார். செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில், Sgwd Y Pannwr நீர்வீழ்ச்சியில், Ystradfellte இல், இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக, வெளியே வராமல் ஒரு நபர் தண்ணீருக்குள் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
குறித்த நபர் 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா ஆவர் . அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்பு சேவை மற்றும் மலை மீட்பு உட்பட பல நிறுவனங்களின் உதவி கிடைத்தது
அவரது உடல் நீருக்கடியில் கேமராவின் உதவியுடன் இரவு 7 மணிக்குப் பிறகு தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்டது . இருப்பினும், தளத்தில் நிலைமை காரணமாக அன்று மாலை அவரை மீட்க முடியவில்லை, மறுநாள் காலையில் முக்குளிப்பவர் வரவழைக்கப்பட்டனர் . அதன் பின்பாடே அவரது உடலை மீட்கப்படுள்ளது
27 வயதான அவர் உறவினர்களுடன் விடுமுறையில் இருந்த போது அனைவரும் நீந்துவந்ததிக்காக தண்ணீரில் இறங்கினர். அதன் போது உறவினர்களில் ஒருவர் பாதுகாப்பாக உணர முடியாத போது மோகன நீதன் அவர்களை நீரிலிருந்து வெளியேற்றுவதட்காக முயன்றார் அப்போது நீரின் அலை ஓட்டத்தில் சிக்கி தண்ணீரில் அடித்து சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்