சிறுவர்கள் குறித்து பெற்றோர்களுக்கு எச்சரித்த சுகாதாரத்துறை… அதிகரிக்கும் தொற்று!!!
தற்போது இலங்கையில் சிறுவர்கள் குறித்து அதிகமான காய்ச்சல்கள் அவர்கள் மத்தியில் தென்படுவதாக வைத்தியத்துறை வட்டாரங்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
இந் நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக சிறுவர்களுக்கு அடிக்கடி இவ்வாறான காய்ச்சல் நிலைமை ஏற்படுகின்றது என்பதான தகவல்களும் பரவலாக பரவி வருகின்றது.
எனவே சன நெரிசலான இடங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்றால் அவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கென முக கவசம் அணிய வேண்டும் என தற்போது லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையில் மேலும் அதிகமாக இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் சிறுவர்களை பண்டிகை காலங்களில் பெற்றோர்கள் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் பரவி வருகின்ற கொரோனா தொற்றானது நாளடைவில் மிக வேகமாக பரவுவதற்குரிய சாத்தியப்பாடுகளும் அதிகமாக இருப்பதினால் இது குறித்து பெற்றோர்கள் சிறுவர்கள் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது .
இயலுமானவரை சிறுவர்களை வீட்டிலே தங்க வைத்துக் கொள்ளுமாறும் வெளியே செல்லும் போது முகக் கவசங்களை அணிவது தொடர்பான நடவடிக்கைகளை கையாளுமாறும் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.