29 மாணவர்களை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் வழக்கு தடையா ஏன்?
29 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் என்ற செய்தி ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி இலங்கையில் அதிகம் பேசப்பட்ட செய்தியாகும்.
குறித்த ஆசிரியர் மாணவிகளை சுமார் 2018 ம் ஆண்டில் இருந்து தொந்தரவு செய்ததாக தகவல் அறிய முடிகின்றது .
இது தொடர்பாக 2018 ஆண்டிலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .
4 ஆண்டுகளுக்கு பின் இவ் வழக்கானது கடந்த ஜூலை மாதம் 31 ம் திகதி விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது .
இந் நிலையில் குறித்த ஆசிரியரினால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான மாணவிகளின் சாட்சிகள் கதவு பூட்டப்பட்ட நிலையில் நீதி மன்றத்தில் வைத்து அளிக்கப்பட்டது .
இதற்கிடையில் , தற்போது மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் இவ் வழக்கு விசாரணைகளை இடை நிறுத்துமாறு கோரிக்கை ஒன்று வந்துள்ளது .
மேலும் இவ் வழக்கில் ஆசிரியர் சார்பாக வழகரிஜர் ஒருவாரும் ஆஜராகவில்லை ,இந்த நிலையில் குற்றவாளியான ஆசிரியர் தான் ஆஜராவதாக கேட்ட்டபோது நீதவான் அவர்கள் அவருக்கு வக்கீல் அஜராகுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டும் இருந்தது .
இச் சம்பவம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின்,மட்டகளப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்ற இடத்தில் உள்ள பிரபல முஸ்லீம் பெண்கள் பாடசாலையிலே நடைபெற்றுள்ளது .
2018ம் ஆண்டு 7 வகுப்பு படித்து கொண்டிருந்த 29 மாணவிகளை யே அப் பாடசாலையில் அத் தரத்தில் கற்ப்பித்த ஆங்கில பாட ஆசிரியரினாலே இவ் துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது .
ஜூலை 31ம் திகதிக்கு பின்னர் இவ் வழக்கு குறித்து விசாரணைகள் ஆரம்பம் ஆனாலும் 2ம் திகதி ஆகஸ்ட் மாதம் மேலும் இது தொடர்பாக மேலும் சிலர் ஆசிரியர்களிடம் வழக்கு விசாரணை செய்யப்பட்ட்து .
பின் 4ம் திகதிக்கு இவ் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட்ட நிலையில் குறிப்பிட்ட வழக்கில் எஹிராளியான ஆசிரியரின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றினால் இவ் வழக்கானது எதிர்வரும் 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .