2024 ஆம் ஆண்டு எரிபொருட்கள் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்??? அதிர்ச்சியில் இலங்கை மக்கள்…. பொருளாதார நெருக்கடியினால் சிக்கித் தவிக்க போகும் இலங்கை பிரஜைகள்!!!
2024 இல் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிதாக விதிக்கப்படவுள்ள 18 சதவீதம் வரி மூலம் இலங்கையின் பொருளாதாரம் ஆனது நெருக்கடி நிலையில் சந்திக்க நேரிடும் என தற்போது இலங்கையின் பெட்ரோலிய கூட்டத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
குறித்த செய்தியானது இலங்கை மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆரம்பத்தில் உயர்த்தப்பட்ட விலைவாசிகளின் அளவே தற்போது வரை குறைக்கப்படாமல் இருக்கின்றமை குறித்து மக்களிடையே அதிருப்தி நிலை காணப்படுவதோடு இனி வரும் ஆண்டில் பெட்ரோல் டீசல் மற்றும் இதர பொருட்கள் விலைகள் உயர்வடையுமாயின் மக்கள் மத்தியில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக அமையக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந் நிலையில் பெட்ரோலிய கூட்டு தாபனத்தின் தொழிற்சங்க செயலாளரான செயலாளர் ஆனந்த பாலித அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ;
பெறுமதி சேர் வட் வரி விதித்த பின்னர் இலங்கையில் தற்போது பெட்ரோல் ஒன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 346 விற்க்கப்பட்டு வருகின்றது எனினும் குறித்த வட் வரியினை விதித்த பின்னர் ஒரு லிட்டர் பெட்ரோலானது சுமார் 62.88 ரூபாய் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 408.88ரூபாயில் விற்கப்படும் எனவும்,
அதனை தொடர்ந்து தற்போதுஒரு லிட்டர் டீசல் விலை 329 ஆக விற்கப்படுகின்ற அதே நேரம் பின்னராக ஒரு லிட்டர் டீசல் ஆனது சுமார் 59.22 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலையாக 388.22 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இந் நிலையில் குறித்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதனை அடுத்து தற்போது இலங்கை நாட்டில் இலங்கை அரசாங்கம் ஆனது முக்கியமாக நான்கு வகையான வரிகளை வசூளிக்கின்றது.
அவ்வகையில் அரசாங்க சமூக பாதுகாப்பு வரி, மது வரி, சுங்கவரி துறைமுக பாதுகாப்பு வரி, என்பன அவற்றுள் அடங்குகின்றன.
இந் நிலையில் டீசல், பெட்ரோல் விலைகளின் ஏற்படும் மாற்றமானது எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்கள், குடிநீர் கட்டணங்கள் என அனைத்தும் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டீசனின் விலையானது அதிகரிக்கப்பட்ட பின்னர் நீர் கட்டணமானது சுமார் 30% அதிகரிக்கப்படும் என தற்போது தெரிய வந்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் எடை உடைய எரிவாயு சிலிண்டர் ஆனது ரூபாய் 650 க்கும் அதிகமாக விலை உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றும் எதிர்வரும் முதலாம் திகதி ஜனவரி மாதம் பெறுமதி சேர் வட் வரி இனை அதிகரித்து இலங்கை மக்களுக்கு மீலா துன்பத்தினை வழங்குவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.
இந்த நிலையை ராஜபக்சர்கள் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு 2024 இல் அடிப்படை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பானது உண்மையில் நாட்டு மக்களுக்கு சுமூகமான வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு ஏதுவான காரணியாக அமையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே நாட்டு மக்களின் நலன் கருதி இது தொடர்பில் சுமூகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் பலர் தற்போது தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.