நோர்வே நாட்டில் உள்ள தமிழ் இளைஞன் புரிந்த சாதனை!! பாராட்டி வரும் தமிழர்கள்…
நோர்வே நாட்டில் தற்போது இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் இலங்கை தமிழர் யாரும் புரியாத சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இவர் நோர்வே யின் கால்பந்தாட்ட கழகம் ஒன்றில் முன்னணி கால்பந்தாட்ட கழகத்தில் முதன்மை பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வரை காலம் இவ்வாறு எவ்வித இலங்கை தமிழர்கள் முதன்மை பயிற்சியாளராக குறித்த கழகத்தில் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த இளைஞன் ஆனவர் UEFA என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்று சஞ்சீவ் மனோகரன் என்பவரே ஆவார்.
மேலும் சஞ்சீவ் மனோகரன் என்பவர் குறித்த கழகத்தின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது .
இதனை அடுத்து இவர் தற்போது முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனை குறித்த கழகமானது தற்போது அறிவித்துள்ளது .
மேலும் இவரது பூர்வீகம் ஆனது இலங்கையாக இருந்தாலும் இவர் டென்மார்க்கில் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு அதிகமாக டென்மார்க்கின் சூப்பர் லீக தொடரின் ஏ சி எஸ் பி கிளப்பில் ஜூனியர் காற்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்ச்ச்சியாளராக பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் முதல் தர காற்பந்து கழகத்தில் பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள இவர் தான் இக் கழகத்தில் பயிற்சியாளராக நியமித்த முதல் இலங்கையர் எனும் பெருமையை சேர்ந்தவர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியானது தற்போது உலகத் தமிழர்கள் அனைவரும் இவரை பாராட்டக்கூடிய ஒரு செய்தியாக அமைந்துள்ளது .
இவ்வாறு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அநேக ஈழத்து தமிழர்கள் பல்வேறு துறைகளில் வெவ்வேறான சாதனைகளைப் படைத்த வண்ணம் வருகின்றது.
அதிலும் இவரது சாதனையானது தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டும் மற்றும் பெருமை கொள்ளும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது .