தலைமன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்…. வெளியான உத்தியோக பூர்வ தகவல்!!
தலைமன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கப்பல் சேவையானது விரைவில் செயல்படுத்தும் நோக்கத்துடன் தற்போது பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் நேற்றைய தினம் முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட இடமான சிலாபத்துறை எனும் இடத்தில் தேசிய பாடசாலை நிகழ்வு ஒன்றிற்காக வருகை தந்து அதில் கலந்து கொண்ட இலங்கையின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அவர்களே தனது உரையின் போது இதனை குறிப்பிட்டு இருக்கின்றார்.
மன்னார் மாவட்டமானது தலைமன்னார் மற்றும் இந்தியா இடையான கப்பல் சேவைகளின் பின்னர் பொருளாதார துறையில் முன்னேற்றமான இடமாக அமையும் எனவும் விரைவில் குறித்த கப்பல் சேவையானது செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மற்றும் அது குறித்தான ஆரம்பகட்ட பணிகளை நடத்துவதற்குரிய திட்டமிடல்களும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மேலும் இது மாத்திரம் இன்றி மன்னார் மாவட்டத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி வெவ்வேறான துறைகளிலும் மன்னாரினை முன்னேற்றத்திற்கு உட்படுத்தலாம் எனவும் மற்றும் மீன்பிடி மூலம் மன்னாரின் வளர்ச்சிக்கு பல்வேறு விதமான திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந் நிலையில் காங்கேசன் துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவையானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இந் நிலையில் குறித்த கப்பல் சேவையானது காற்றின் அதீத வேகத்தின் காரணமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தெரிய வந்ததுயுள்ளது.
மேலும் இவ்வாறு நாட்டின் இரு வெவ்வேறு இடங்களில் கப்பல் சேவை இருபினும் தலைமன்னார் மற்றும் இந்தியா கப்பல் சேவையை மிகவும் சுமூகமான பயணங்களை கொண்டதாகவும் குறைவான நேர வித்தியாசங்களைக் கொண்டதாகவும் அமைகின்ற படியினால் விரைவில் தலைமன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் பலதரப்பு மக்களினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் முகமாக நேற்றைய தினம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அவர்களின் உரைகளின் போது காணக்கூடியதாக இருக்கின்றது.