Srilanka News

ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்!! அம்பலமான உண்மை….

இலங்கையின் கொழும்பில் உள்ள களுபோவில போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தினை குறித்து இரட்டை குழந்தைகளின் பெற்றோர்கள் ஊழியர்களின் அசம்பந்தப் போக்கின் காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பின் கெஸ்பேவ எனும் பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற பெண் கடந்த 8ம் திகதி களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

மேலும் அப் பெண்ணிற்கு கிடைக்கப் பெற்ற இரட்டைக் குழந்தைகள் இருவரும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குறைமாத குழந்தை பிரிவிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இருப்பினும் கடந்த 19ஆம் தேதி அன்று அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.

உயிரிழப்பு சம்பவத்திற்கு சுவாசக் கோளாறு காரணமாக இருந்ததாக கடமையிலிருந்து வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்றைய குழந்தை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.

இவ்வாறு தனது இரு குழந்தைகளும் வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களுக்கு பெரும் வேதனையை அளித்த சம்பவமாக இருக்கின்றது.

இது தொடர்பாக பெற்றோர்கள் கூறும் போது வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தின் காரணமாகவே தனது இரு பிள்ளைகளையும் இழந்து தவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக இரட்டை குழந்தை பெற்றோர்கள் கெஸ்பேவ போலீஸ் நிலையத்தில் முறைபாடினையும் பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து கலுபோவில போதனா வைத்தியசாலையின் குறித்த அதிகாரி அவர்களினால் இது தொடர்பாக ஆராய்வதற்கென வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு ஊழியர்களின் அலட்சியம் காரணமாக பல்வேறு மரணங்கள் இலங்கை வைத்தியசாலையில் பதிவாகின்ற செய்தி வழக்கமான ஒன்றாக காணப்படுகிறது.

இருப்பினும் இக் குறித்த இரட்டை குழந்தைகளின் இறப்பு சம்பவமானது ஊழியர்களின் அசமந்தப் போக்கின் காரணமாக நடைபெற்றுள்ளது என்பதற்குரிய எவ்வித உத்தியோகப்பூர்வ தகவல்களும் இது வரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெற்றோர்களின் வாக்குமூலங்களுக்கு இணங்க ஊழியர்களின் கவனக்குறைவு இதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button