Srilanka News

இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு விற்கப்படும் பெண்கள்… மசாஜ் சென்டர் அட்டூழியங்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….

இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு மற்றும் பிரபலங்களுக்கும் பெண்கள் விற்பனை செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாக இருக்கின்றது.

மேலும் இலங்கையின் நுகேகொட நாவல வீதியிலே கால் மசாஜ் செய்யும் சென்டர் என பெயரிடப்பட்டு இயங்கி வருகின்ற விபச்சாரதிற்கென பெண்கள் விற்பனை செய்யும் இடம் ஒன்று தற்போது போலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு அவ் மசாஜ் சென்டரில் நீண்ட காலங்களுக்கு மேலாக பெண்கள் விற்றப்பட்டு வருகின்றனர் .

இந்த நிலையில் குறித்த மசாஜ் சென்டரில் சுமார் 14 பெண்களும் மற்றும் முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர்.

குறித்த மசாஜ் சென்டரில் இருந்து பெண்கள் மற்றும் மேலாளர் கைது செய்த செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மசாஜ் சென்டரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு கருத்தடை உரைகள் மற்றும் பாலியல் செயல்களுக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களும், அழகு சாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன .

இணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு ஆயுர்வேத கால் மசாஜ் என பிரபல்யம் அடைந்துள்ள குறித்த மசாஜ் சென்டருக்கு நபர்களை வரவழைத்து பின்னர் அதிக விலைக்கு பெண்கள் விபச்சாரத்திற்காக விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்திய போது குறித்த பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மற்றும் குறித்த மசாஜ் சென்டர் ஆனது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ,

மேலும் குறித்த கட்டடத்தில் 7000 முதல் 25000 ரூபாய் வரையிலான விலையில் பெண்கள் பணத்திற்காக விற்க்கப்பட்டுள்ளதும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

மற்றும் குறித்த மசாஜ் சென்டர் ஆனது இரவு விடுதி போல வடிமமைக்கப்பட்டதாகவும் மற்றும் வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும்,

மற்றும் பெண்கள் விபச்சாரத்திற்கு என வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படும் வகையில் குறித்த கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 பெண்களும் 20 மற்றும் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த பெண்கள் இரத்தினபுரி, நுவரெலியா, ஹட்டன், பொகவந்தலாவை, நீர்கொழும்பு, அவிசாவளை, கேகாலை, குருநாகல் போன்ற இலங்கையின் பல்வேறு விதமான பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மற்றும் குறித்த பெண்கள் வேலை செய்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மற்றும் குறித்த பகுதியை நன்கு சோதனை இட்ட பின்னர் பல சொகுசு கார்கள் அவ்விடத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சிசிடிவி காட்சிகளை காணக்கூடியதாக இருந்ததாக சோதனையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த மசாஜ் சென்டர் முகாமையாளர் அருகாமை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக ஊ ஊழல் ஒழிப்பு பிரிவு தற்போது தகவலினை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button