தவறான புகைப்படங்களை பதிவிடும் நபர்கள் கைது!!! அமுலில் வரும் திட்டம்….
இணையம் வாயிலாக தவறான புகைப்படங்கள் அல்லது தவறான காணொளிகளை வெளியிடும் நபர்களை எவ்விதமான முறைப்பாடுகளும் இன்றி கைது செய்யும் திட்டம் ஒன்றினை கூகுளை நிறுவனம் ஏற்றப்படுத்திள்ளது.
சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்களோ அல்லது பாலியல் ரீதியான காணொளிளோ இணையத்தில் வெளியிடப்பட்டாலும் மற்றும் இது போன்ற காணொளிகளை தொடர்ந்து பார்க்கப்பட்டாலும் கூகுள் நிறுவனமானது இது தொடர்பான தகவல்களை இலங்கை குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியாகத்திற்கு வழங்குவது குறித்தான திட்டமொன்று தற்போது அமைத்துள்ளது.
இதன் காரணமாக இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் குறைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ் வகையில் தற்போது 18 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்போது இவ்வாறான செயற்பாடு குறித்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சுமார் 18 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளஞ்ஞனானவர்அவருடைய உறவினர் ஒருவரை இரண்டு வருடங்களாக தவறான முறையில் காணொளிகளை பதிவிட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனாலே குறித்த இளைஞன் தற்போது எவ்வித முறைப்பாடுகள் இன்றியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இணைய பாவனையாளர்கள் இது குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.