இலங்கை பொலீஸாருக்கு கடுமையாகும் சட்டம்…விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
தொடர்ந்து பொது மக்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட இலங்கை பொலீஸாருக்கு எதிராகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தற்போது தெரிவித்துள்ளது.
போலீஸ் நிலையத்தில் மக்களின் மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பான அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படாத சுமார் ஒன்பது போலீஸ் உத்தியோகத்தர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக குறித்த போலீஸ் ஊடக பிரிவு தகவலினை வழங்கியுள்ளது.
மக்களின் முறைப்பாட்டி அமையவே இவ்வாறு 9 போலீஸ் உத்தியோகஸ்தர்கள் உம் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொது மக்களுக்காக கடமையில் அமர்த்தப்படுகின்ற போலீசார் பொதுமக்களுக்கு எதிராக புரிகின்ற சம்பவங்களின் ஆளே பொதுமக்கள் இவ்வாறான முறைப்பாடுகளை முன்னெடுக்கின்றனர் எனவும் ,
குறித்த இலங்கை பொலீஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் தகுந்த ரீதியில் விசாரணை செய்யப்பட்டு பின்னர் உறுதி செய்யப்படுமாயின் குறித்த போலீஸ் உத்தியோகத்தர் பதவியில் இருந்த உடனடியாக நீக்கப்படுவர் எனவும் போலீஸ் பிரிவு தெரிவிக்கின்றது.
இதற்கு அமைய மக்கள் முறைப்பாடுகள் தொடர்பான தலைமையக சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தலுக்கு இணங்காத சுமார் 125 வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளதாகவும் தெரிய வருகிறது.
அதில் சுமார் 13 சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து 9 அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் எச்சரித்த கடிதங்கள் வழங்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை சுமார் 19 என போலிஸ் ஊடக பிரிவு தகவலினை வழங்கியுள்ளது.
மக்களுக்காக சேவையாற்ற தவறும் இவ்வாறான போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமாயின் சம்பவங்கள் குறித்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விழிப்பாக இருப்பதுடன் பொதுமக்களுக்கு உரிய நியாயமான நீதியும் கிடைக்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது.