மீண்டும் கோவிட் 19 நடைமுறைகள்… மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இலங்கை நாட்டில் மீண்டும் கோவிட் 19 தொடர்பான நடைமுறைகளை மக்கள் பின்பற்றக் கோரி சுகாதார துறையானது தற்போது எச்சரிக்கையினை பொது மக்களுக்கு விடுத்துள்ளது.
இது குறித்து ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை ,உயிரணு , நிர்பீடனம் தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளரான கலாநிதி சந்திம ஜீவந்தர என்பவர் தற்போது அறிவுறுத்தி இருக்கின்றார்.
மற்றும் கோவிட் 19 இன் திரிபானா J N 1 OMICRON வைரஸின் உப பிறழ்வானது தற்போது புதிய கோவிட் வைரஸாக திரிபடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் இலங்கையில் குறித்த வைரஸ் அதிகமாக பரவி வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந் நிலையிலே மக்களை மீண்டும் முக கவசங்கள் அணிந்து கோவிட் கால நடைமுறைகளை பின்பற்ற கோரி அறிவுறுத்தி இருக்கின்றார்.
ஆரம்பத்திலே நடைமுறைகளை பின்பற்றி வந்தால் இதன் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் காய்ச்சல் மற்றும் இருமல் மணமின்மை சுவையின்மை,அதிக வெப்பம் சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு ,வாந்தி போன்ற அறிகுறிகளை முக்கியமாக J N 1 OMICRON காட்டுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
எனவே இவ்வாறான அறிகுறிகள் உடலில் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் இதனது ஆதிக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் உடனடியாக கோவிட் 19 தொடர்பான பாதுகாப்பான நடைமுறைகளை முன்கூட்டியே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தற்போது பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.