வைட்னிங் கிரீம் ஆல் அதிகரிக்கும் புற்றுநோய்!! இலங்கையில் பதிவாகிய சம்பவம்…
சமீப காலங்களில் இலங்கையில் அதிகரித்து வருகின்ற வைட்னிங் கிரீம் பாவணையால் சரும புற்றுநோய் அதிகரித்து வருவதாக டாக்டர் கள் தெரிவிக்கின்றன.
சருமத்தை வெண்மையாக்குவதற்கும் ஒளிரச் செய்வதற்கும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் எக்ஸ்ஃபோலியண்ட்களைப் பயன்படுத்துவதால் இலங்கையில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் (HPB) குறிப்பிட்டு உள்ளது.
வைட்னிங் கிரீம் களினால் எவ்வாறு புற்றுநோய் ஏற்ப்படுகின்றது?
இறுதியாக நடைப் பெற்ற HPB செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய தோல் மருத்துவர் டாக்டர் ஸ்ரீயானி சமரவீர, சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்கு இது போன்ற அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் அதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் ,“இயற்கையாக இலங்கையர்களுக்கு தோல் கருமையாக இருக்கும் இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
ஏனேனில் வெள்ளை நிறமுள்ளவர்கள் உள்ள நாடுகளில் தோல் புற்று நோய் பாதிப்புகள் அதிகம் இருக்கும் எனவும் அதே வேளையில், கருமையான சருமம் உள்ளவர்களுக்கு தோல் புற்றுநோயின் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
சருமத்தின் நிறத்தை வெள்ளை ஆக்கச் செய்யும் முயற்சி ஆனது சருமப் பிரச்சனை மட்டு மல்ல, உடல் நலப் பிரச்சனையும் கூட உருவாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது .
இப்போ தெல்லாம் மக்கள் இந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்களுக்கு அடிமையாகிவிட்டனர்” என்றே கூற முடியும் .
நாட்டில் அழகுசாதனப் பொருட்களின் அதிகப் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதற்கான பதிலை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
“ஆனால், சமீப காலமாக, இலங்கையில் அதிக தோல் புற்றுநோய்கள் பதிவாகும் நிலை அதிகரித்து வருகிறது.
எனவே, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (என்எம்ஆர்ஏ) சட்டத்தை விரைவில் வலுப்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது அவசியம்” என்றும் கூறினார் .
சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் வைட்னிங் கிரீம் களில் பாதரசத்தின் சதவீதம் அதிகமாக உள்ளது, ஆனால் இது நீண்ட கால சிறுநீரக கோளாறுகள் மற்றும் புற்று நோய்களுக்கு வழிவகுக்கும்.
சில வகையான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அனைத்து வகையான எக்ஸ்ஃபோலியண்ட்களிலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்,
மற்றும் அங்கீகரிக்கப்படாத இரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்தப் பொருட்கள் தோல் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவை என்பது மருத்துவ அறிவியல் தெளிவாக கூருகின்றது .
ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், தோல் மெல்லியதாகவும், சிவப்பு நிறம் ஆகவும், செதில்கள் ஆகவும் மாறும்.
இதனால் அதிக முகப்பரு மற்றும் பூஞ்சை தொற்றுகளும் தோலில் ஏற்படும்,” என்று அவர் கூறினார்.
“வெள்ளைப் படுத்துவதைப் பொறுத்த வரை, இப்போ தெல்லாம், மக்கள் ஒரே இரவில் தங்கள் சருமத்தை வெண்மையாக்க விரும்புகிறார்கள்.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களைத் தேடுவதற்குப் பதிலாக, இலங்கை நாட்டில் நுகர்வோர் முதலில் விலையைப் பார்க்கிறார்கள், அது வெள்ளையாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும் பார்த்தே வாங்குகிறார்கள் .
இது பொது மக்களிடையே அதிகரித்து உள்ள ஒரு மோகம் ஆகும் ,” என்று அவர் கூறினார்.
எனவே இது குறித்து மிக கவனமாக செற்பட வேண்டும் . மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களையே கொள்வனவு செய்து பயன் படுத்த வேண்டும் . மிக அவதானமாக செயல் படுவோம் .