கையடக்க தொலைபேசி எஸ் எம் எஸ் க்கு வரி!!! வெளியான அதிர்ச்சி தீர்மானம்….
தற்போது இலங்கையில் கையடக்க தொலைபேசி மூலம் எஸ்.எம்.எஸ் இனை அனுப்புவதற்கு வரி அறவிடப்படுவது தொடர்பான செய்தியினை நிதி ராஜாங்க அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் தற்போது தெரிவித்திருக்கின்றார்.
இவர் நேற்று பாராளுமன்றத்தில் இது குறித்த அறிவிப்பினையும் அதாவது கையடக்க தொலைபேசிக்குரிய எஸ்எம்எஸ் இற்க்கென குறித்த வரி அறிவிப்பினை வெளியிட்டு இருக்கின்றார்.
அதற்கமைய அவர் தெரிவிக்கையில்;
கையெடக்க தொலைபேசியின் மூலம் அனுப்பப்படுகின்ற எஸ் எம் எஸ்களுக்கும் அதனை தொடர்ந்து நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் எஸ்எம்எஸ் களுக்கும் வரி அறவிடப்படும் என அவர் தெரிவித்து இருக்கின்றார் .
இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது .
மற்றும் குறித்த வரியானது அரச வருமானம் பெறும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காகவே என அவர் குறிப்பிட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பொது மக்கள் பலரும் அரச வருமானம் பெறும் ஊழியர்களுக்காக பொது மக்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்குகின்றது அரசு என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குரிப்பிடத்தக்கது .