சவுதியில் கொடூரமாக நடத்தப்பட்ட இலங்கை பெண்!! குறித்த பெண் கூறும் அதிர்ச்சி தகவல்…
இலங்கையில் இருந்து சவுதியில் வீட்டு பணி பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கையின் மாத்தளை எல்கடுவ தேயிலைத் தோட்டத்தினை வசிப்பிடமாகக் கொண்ட எம் எஸ் தியாக செல்வி என்பவருக்கு சவுதியில் பணிபுரிந்த வீட்டில் கொடூரமாக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது .
மேலும் இவ் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் அவர் வீட்டு வேலை பார்த்து வந்த வீட்டின் உரிமையாளர்கள் அவரது உணவிற்கு பதிலாக 5 இரும்பு அணிகளையும் மற்றும் துணி உலர்த்துவதற்காக பயன்படுத்தும் இரும்பு ஸ்பிரிங்குகளையும் உண்ணுவதற்காக கொடுத்த சம்பவமானது தற்போது இலங்கை உலுக்கி வருக்கின்ற சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
இதனை அடுத்து தனது சொந்த நாடான இலங்கைக்கு வருகை தந்த குறித்த பனி பெண் தனது வயிற்றில் ஆணிகளுடன் வந்து இறங்கியுள்ளார்.
இவ் அதிர்ச்சூட்டும் சம்பவம் தொடர்பாக தற்போது பல்வேறு வகையான கேள்விகள் எழுந்துள்ளது.
இவர் குடும்பத்தின் வறுமைக்காக சவுதி சென்று உழைக்கின்ற 21 வயதானவர் எனவும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொடூரமாக நடத்தப்படுகின்ற சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு இரக்கமற்ற தன்மையுடைய நபர்கள் தற்போது வரை இவ் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது தான் வியப்பாக இருக்கின்றது.