இலங்கையில் மீண்டும் QR முறையில் எரிபொருள்..
இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னர் அமல் படுத்தப்பட்ட QR முறைகளில் இனிவரும் காலங்களில் எரிபொருள் விநியோகிக்கப் படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தற்போது நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ் நாணயக்காரர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னரே இக் கருத்தினை தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியின் காரணமாக இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் எனவும் மற்றும் எரிபொருட்களின் தட்டுப்பாடு நிலவும் ஆயின் qr முறைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
மற்றும் எரிபொருட்கள் மட்டுமின்றி ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்வதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் அவர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருளின் விலை அதிகரிக்காமல் தற்போது உள்ள விலையின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு ஒரே ஒரு மாற்று நடவடிக்கை QR முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வது தான் என்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டி உள்ளார்.
மற்றும் உலக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக முக்கிய வல்லரசு நாடுகளிடமிருந்து எரிபொருட்கள் ஏற்றுமதி குறைவாகவே எதிர்வரும் காலங்களில் காணப்படலாம் எனவும்.
மற்றும் குளிர்கால நிலை காரணமாகவும் எரிபொருள் போக்குவரத்துக்காக அறவிடப்படுகின்ற கட்டணமானது அதிகரிப்பு என்பன காரணமாகவே எரிபொருள் விலையானது தற்போதுள்ள விலையை விட பல மடங்கு உயரலாம் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
முக்கியமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரின் காரணமாகவே இவ்வாறு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளினை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் எனவும் தெரியவருகின்றது.