Srilanka News

முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் அகழ்வு பணியின் போது ராணுவ வீரர்கள் செய்த செயல் கோபத்தில் பொதுமக்கள்!!!

முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் எனும் பகுதியில் மனித புதைக்குழின் அகழாய்வானது உத்தியோகபூர்வமாக கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது எட்டு நாட்கள் தொடர்ச்சியாக அகழாய்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ் அகழாய்வு பணியின் போது தற்போது வரை சுமார் 3 மனித எலும்பு கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன்,

விடுதலைப்புலிகளின் இலக்க தகடும் மற்றும் சைனட் குப்பி ஒன்றும் தடையப் பொருட்களாக அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த மனித புதைக் குழினுள் சடலங்கள் ஒன்றாக குவிக்கப்பட்டு இருக்கின்றமைனாலும் நெருக்கமாக காணப்படுவதாலும் இச்சடலங்களை அகழாய்வு செய்வதற்குரிய காலமானது அதிகமாக இருக்கின்றது என அகழாய்வு பணியினை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடையப் பொருட்களையும் எலும்பு கூட்டு தொகுதியையும் சரியாக எடுக்க வேண்டும்எனவும் இல்லை என்றால் இது தொடர்பான சரியான தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாத போய்விடும் எனவும்,

இதனால் இவ்வகழாய்வு பணிக்குரிய கால எல்லையினை இதுவரை நிர்ணயிக்க முடியாது உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் அகழாய்வு…

மேலும் அகழாய்வு பணிக்காக சுமார் 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட இரு தகடுகளும் எந்த காலப்பகுதியினைச் சேர்ந்தது என்கின்றமை குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் பாதுகாப்புக்காக முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் பகுதிக்கு சென்றுள்ள ராணுவ வீரர்களின் செயல் தற்போது சமூக வலைத்தளங்கள் எங்கும் சர்ச்சைக்குரிய பதிவுகளை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு எடுக்கப்படுகின்ற தடயப்பொருட்களை ராணுவ வீரர்கள் கையுறை இன்றி அதனை கையாளுவதாகவும் இதனால் தடைய பொருட்கள் சிதைக்கு உட்பட கூடும் எனவும் பொதுமக்கள் மற்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெறும் பாதுகாப்பிற்காக மாத்திரமே அப்பகுதியில் ராணுவ அதிரடி படையினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் .

இருப்பினும் இவர்கள் கையுறையின்றி தடய பொருட்கள் மீது கையாளும் செயல் குறித்து பல தரப்பினரும் கேள்விகள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர் .

முல்லைத்தீவு

மேலும் தடையப் பொருட்களின் மீது இவர்கள் கையாளுவதற்குரிய அதிகாரத்தினை யாரும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தடயப் பொருட்களை கையுறையின்றி கையாளும் போது கைகளில் உள்ள வேறு ரசாயன பதார்த்தங்களும் மற்றும் வியர்வை என்பன தடையப் பொருட்களின் மீது தாக்கத்தினை ஏற்படுத்ததி தடயப் பொருட்களின் சான்றுகளில் உள்ள முக்கிய விடயங்களை கூட மாற்றக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இது குறித்து பல தரப்பின மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மனித புதைக்குழி தொடர்பான இவ் அகழாய்வு பணிகள் தொடர்பான அறிக்கையினை அகழாய்வு அதிகாரிகள் முல்லைதீவு நீதவான் நீதிமன்றத்திற்கு எதிர்வரும் காலங்களில் சமர்ப்பிக்க இருக்கின்றனர்.

மேலும் இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூட்டுத்தொகுதிகளும் அது தொடர்பான தடயப் பொருட்களும் முல்லை தீவு மாவட்டத்தின் பொது வைத்தியசாலை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்து .

Related Articles

Back to top button