Srilanka News

முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எம் எஸ் சுமந்திரன் வெளியிட்ட தகவல்..

இலங்கை நாட்டிலே முல்லைத்தீவு நீதிபதிக்கு நடந்தேறிய கொலையச்சுறுத்தல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் என்பன இலங்கையில் மிகவும் பரவலாக பேசப்படுகின்ற ஒன்றாக தற்போது மாறப்பட்டிருக்கின்றது.

இதற்கு சட்டத்துறை சார்பாக சட்டத்தரணிகள் பலரும் இது குறித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந் நிலையில் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியானவர் கடந்த 24 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறிய சம்பவமானது சர்வதேசத்திற்கு உரத்த சொல்ல வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரன் அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியினை முல்லைதீவில் முள்ளியவளை எனும் பகுதியில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் எம்.எஸ் சுமந்திரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இது ஒரு மோசமான நீதி புரழ்வு விவகாரம் எனவும் மற்றும் நீதிபதிக்கு இந் நாட்டின் நீதித்துறை எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை இவ் விடயம் தெளிவாக மக்களுக்கு காட்டுகின்றது எனவும்,

மற்றும் இலங்கை நாட்டின் நீதித்துறை சுயாதீனம் குறித்து தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் எம் எஸ் சுமந்திரன் அவர்கள் தனது கருத்து தெரிவிக்கும் போது இவ் விடயமானது இன்றைக்கு நடக்கின்ற ஒரு விடயம் அல்ல எனவும் முல்லைத்தீவு நீதிபதிக்கு நடந்திருக்கும் இவ்வாறான சம்பவங்கள் புதிது அல்ல எனவும் இது போன்ற பல சம்பவங்களினால் பல நீதிபதிகள் அழுத்தங்களினால் பதவியை விட்டு மற்றும் நாட்டை விட்டு வெளியேற பல நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார் .

இவ்வாறு பல்வேறு விதமான திருப்பு முனைக்குரிய விடயங்களையும் கூறி இருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.

குறித்த நீதிபதியான சரவணன் ராஜா அவர்களுக்கு உயர் அதிகாரி ஒருவரினால் மற்றும் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கொடுக்கப்பட்ட நெருக்கல் நிலையினால்,

இவர் இவ்வாறான ஒரு முடிவை எடுத்ததாகவும் மற்றும் இது போன்று பல்வேறு ரீதியான அச்சுறுத்துக்கள் அன்றிலிருந்து இன்று வரை நடைபெறுவதாகவும்,

அதிலே ஒரு சில விடயங்கள் மாத்திரமே இவ்வாறு வெகுவாக பரவி வருகின்றதாகவும் தெரிய வருகின்றது.

போராட்டம்…

மற்றும் இவ் விவகாரம் குறித்து தகுந்த நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கை நாட்டைச் சுற்றி அனைத்து பிரதேசங்களிலும் நாளுக்கு நாள் மாறி மாறி இப் பிரச்சனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மக்களும்,

மற்றும் சட்டத்தரணிகளும், நீதிபதிகள் என பல்வேறு விதமானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

முல்லைத்தீவு நீதிபதிக்கு

இந் நிலையில் இலங்கையின் வட மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான;

மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு என பல்வேறு பிரதேசங்களிலும் நீதிமன்ற உறுப்பினர்கள் பணி புறக்கணிப்பு செய்வதாக தற்போது தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு

இச் சம்பவம் குறித்து இவ்வாறு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

நீதிபதியான சரவணராஜா அவர்கள் தற்சமயம் எங்கு இருக்கின்றார் தொடர்பிலான விபரங்களோ அல்லது,

அவரை தொடர்வதற்குரிய எவ்வித வழிகளும் இல்லை என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

குறித்த நீதிபதிக்கு அச்சுறுத்திய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரது வேண்டுகோளாக இருப்பதுடன்,

மற்றும் இவ்வாறானதோர் நிலைமை இனிவரும் காலங்களில் இலங்கையில் ஏற்படக்கூடாது என்றும் பல தரப்பு மக்களும் தெரிவித்திருகின்றனர்.

Related Articles

Back to top button