யாழ் மாவட்ட ரீதியிலான பிரமாண்டமான மின்னொளியிலான உதைபந்தாட்டச் சுற்று போட்டியை நடத்தியது கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம்….
யாழ் மாவட்ட ரீதியிலான பிரமாண்டமான மின்னொளியிலான உதைபந்தாட்டச் சுற்று போட்டியை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தியது.
வடமராட்சி லீக்கின் அனுமதியுடன் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய யாழ்மாவட்ட ரீதியிலான 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 14.10.2023 இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இப்போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டு கழகமும் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகமும் விளையாடியிருந்தனர்.
சிறப்பாக மற்றும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் பெனால்டி முறையில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை 200,000/- பணப் பரிசையும் சுவீகரித்தனர்.
ஆனைக்கோட்டை யூனியன் 2ம் இடத்தையும் மற்றும் 3ம் இடத்தை நாவாந்துறை சென் மேரிஸ் அணியும் 4ம் இடத்தை உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியும் பெற்றுள்ளனர்.
இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக றோயல் அணியின் பிரசன்னா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.