Srilanka News

யாழில் அதிகரிக்கும் திருடர்கள்… போலீசார் எடுத்து அதிரடி நடவடிக்கை!!

தற்போது யாழில் அதிகரிக்கும் திருடர்களினால் போலீசார் பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக தங்களது ஆவணங்களையும் ,ஆபரணங்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்படி யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

இந் நிலையில் இவ் வருடத்தில் கடந்த எட்டு மாதங்களில் சுமார் 19 மோட்டார் வண்டிகள் திருட்டுப் போய் உள்ளதாகவும் அது குறித்த வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மோட்டார் வண்டிகள் நகரப்பகுதியில் காணப்படுகின்ற கடைகளுக்கு செல்ல நிறுத்தி வைக்கப்படும்போது திருடப்படுகின்றன எனவும் தெரியவந்துள்ளது.

மற்றும் இவ்வாறு மோட்டார் சைக்கிள்களில் பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பான இடங்களில் தங்களது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு செல்லுமாறு போலீசார் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்றும் குறிப்பாக மோட்டார் சைக்கிளுக்கு ஹான்ட் லாக் செய்து செல்லுமாறும் தெரிவித்து இருக்கின்றனர்.

திருடப்படும் மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்கள் மாற்றப்பட்டு அதனை விற்பனை செய்து வருகின்றதான செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த திருட்டு சம்பவமானது நடைபெறுகின்றதாகவும் மற்றும் இதற்கென தீர்மானிக்கப்பட்ட கும்பல்கள் தொடர்ச்சியாக இச் சம்பவத்தில் தொடர்புபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு யாழில் அதிகரிக்கும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய திருடர்களை காணும் நபர்கள் உடனடியாக 021 222 22 22 என்ற போலீஸ் நிலையத்தின் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக தகவல் வழங்கக் கோறியும் போலீசார் அறிவித்தலினை விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இவ்வாறு திருட்டுச் சம்பவத்தில் அடுத்தடுத்து ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சுமார் 23 வயது உடைய இளைஞர் எனவும் தெரியவந்துள்ளது.

மற்றும் இவர் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த நபரிடம் இருந்து 5 தண்ணீர் மோட்டார்களும் போலீசாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் போது குறித்த இளைஞனானவர் போதைப்பொருள் நுகர்வதற்காகவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது .

Related Articles

Back to top button